இந்தியா

ரீல்ஸ் எடுக்க தண்ணீர் தொட்டி மீது ஏறிய உ.பி. இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு: விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் 2 பேர் மீட்பு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்​தில் ரீல்ஸ் எடுப்​ப​தற்​காக மேல்​நிலை தண்​ணீர் தொட்டி மீது ஏறி, இறங்க முடி​யாமல் தவித்த இளைஞர்கள் விமானப்​படை ஹெலி​காப்​டர் மூலம் மீட்கப்பட்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் சித்​தார்த் நகர் மாவட்​டத்​தில் உள்ள ஒரு பழைய மேல்​நிலை தண்​ணீர் தொட்​டி​யின் மீது நேற்று முன்​தினம் மதி​யம் 1 மணி​யள​வில் 5 இளைஞர்​கள் ஏறி உள்​ளனர். சமூக வலை​தளத்​திற்​காக ‘ரீல்​ஸ்' எடுக்க அந்​தத் தண்​ணீர் தொட்​டி​யின் மீது ஏறி​யுள்​ளனர்.

அப்​போது எதிர்​பா​ராத​வித​மாக தொட்​டி​யின் ஏணி உடைந்​த​தில் 3 பேர் கீழே விழுந்​தனர். இதில் ஒரு​வர் உயி​ரிழந்​தார், காயமடைந்த இரு​வர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். மற்ற 2 பேர் தொட்​டி​யின் உச்​சி​யில் சிக்​கிக் கொண்​டனர்.

இது குறித்து தகவல் அறிந்து மாவட்ட ஆட்​சி​யர், கூடு​தல் மாவட்ட ஆட்​சி​யர், கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் மற்​றும் பிற உயர்​மட்ட அதி​காரி​கள் சம்பவ இடத்​துக்கு சென்​றனர். மின்​சா​ரத் துறை, நகராட்சி நிர்​வாகம் மற்​றும் தேசிய பேரிடர் மீட்​புக் குழு​வினரும் இந்த மீட்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர். ஆனாலும் சுமார் 16 மணி நேரம் போராடி​யும் அவர்​களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து மாநில அதி​காரி​களின் கோரிக்​கையை ஏற்​று, விமானப்​படைக்கு சொந்​த​மான ஐஏஎப் Mi-17 V5 ஹெலி​காப்​டர் மீட்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டது. அதி​காலை 5:20 மணி​யள​வில் கான்​ஷி​ராம் அவாசி காலனியை அடைந்த ஹெலி​காப்​டர், வெறும் 15 நிமிடங்​களில் அந்த இளைஞர்​களை மீட்​டது. பின்​னர் அவர்​கள் கோரக்​பூருக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT