இந்தியா

உ.பி. தேர்தலில் 3-வது அணி உருவாகிறது: ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், ஆசாத்தின் ஏஎஸ்பிகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்​தர பிரதேச சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்​டு தொடக்கத்தில் நடைபெற உள்​ளது. இதில், ஆளும் பாஜக தொடர்ந்து 3-வது முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்​றத் தீவிரமாகப் பணி​யாற்றி வரு​கிறது. பிர​தான எதிர்க்கட்​சிகளான சமாஜ்​வா​தி​யும் காங்​கிரஸும் கூட்​டணி அமைத்​துப் போட்டியிடுகின்​றன.

இச்​சூழலில், மக்​களவை எம்​.பி-க்​களான ஹைத​ரா​பாத்​தின் அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் மற்​றும் உ.பி. நாகினா தொகு​தி​யின் சந்திரசேகர ஆசாத்​தின் ‘ஆசாத் சமாஜ் கட்சி (கான்​ஷி​ராம்)’ ஆகியவை கூட்​டணி அமைக்​கின்​றன. இவர்​களு​டன் மாநிலத்​தின் சிறிய கட்​சிகளும் இணைந்து மூன்​றாவது அணியை அமைக்க உள்​ளன.

உ.பி.யில் தலித்​ (21%) மற்​றும் முஸ்​லிம்​ மக்​கள் தொகை (19%) 40% ஆக உள்​ளது. சுமார் 41 தொகு​தி​களில் தலித், முஸ்​லிம் வாக்காளர்களின் எண்​ணிக்கை 50 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக உள்​ளது. முன்​னாள் முதல்​வர் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்​பி) தற்​போது மாநிலத்​தில் பலவீனமடைந்​துள்​ளது. இக்கட்சியின் பெரும்​பாலான தலித் வாக்​காளர்​கள் பாஜக​வுக்கு ஆதர​வளிக்​கத் தொடங்​கிய நிலை​யில், அவர்​களில் கணிச​மானோர் தற்​போது சந்​திரசேகர் ஆசாத்தை நோக்​கித் திரும்பியுள்ளனர். எனவே, சமூகக் கட்​டமைப்​பின் அடிப்​படை​யில் ஒவைசி - ஆசாத் கூட்​டணி மிக​வும் வலிமை​யான ஒன்​றாகக் கருதப்​படு​கிறது.

இக்​கூட்​ட​ணி​யில், முஸ்​லிம்​கள் பெரும்​பான்​மை​யாக உள்ள 40 முதல் 45 தொகு​தி​களில் ஏஐஎம்​ஐஎம் போட்​டி​யிடும் எனத் தெரிகிறது. மீத​முள்ள தொகு​தி​களில் ஆசாத்​தின் ஏஎஸ்​பிகே மற்றும் இதர சிறிய கட்​சிகள் வேட்​பாளர்​களை நிறுத்த வாய்ப்புள்ளது.

பாஜக​வின் ஆட்சி தொடர்​வதைத் தடுக்க இண்டியா கூட்​ட​ணி​யில் இணை​யத் தயா​ராக இருப்​ப​தாக ஆசாத் மற்றும் ஓவைசி தரப்பில் விருப்​பம் வெளிப்​பட்​டது.

ஆனால், சமாஜ்​வா​தி​யும் காங்​கிரஸும் இவர்​கள் இரு​வரை​யும் கண்​டு​கொள்​ள​வில்​லை. இதனால் 3-வது அணி​ உருவாக உள்ளது. இதன் தாக்​கம் கணிச​மாக இருக்​கும் எனத் தெரி​கிறது. குறிப்​பாக, முஸ்​லிம் வாக்​கு​களை நம்​பி​யுள்ள சமாஜ்​வாதி - காங்​கிரஸ் கூட்டணிக்கு இதனால் அதிக இழப்பு ஏற்பட வாய்ப்​புள்​ளது. பாஜகவுக்​குத் தலித் வாக்​கு​களில்​ மட்​டுமே லேசான சரிவு ஏற்படும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT