இந்தியா

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை வசூல்: உச்ச நீதிமன்றம் யோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: போக்​கு​வரத்து விதி​களை மீறு​பர்​களுக்கு ‘இ-சலான்’ மூலம் விதிக்​கப்​படும் அபராதங்​களை மின் கட்​ட​ணத்​துடன் இணைத்து வசூலிக்​கலாம் என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்​துள்​ளது.

போக்​கு​வரத்து விதி​மீறல்​களை மின்​னணு முறையில் அமல்​படுத்​து​வது, செலுத்​தப்​ப​டாத போக்​கு​வரத்து ‘இ-சலான்’ அபராதங்​களை வசூலிப்​பது தொடர்​பான மனு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, கே.​வி. விஸ்​வ​நாதன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, நாடு முழு​வதும் சுமார் ரூ.45,000 கோடி மதிப்​பிலான அபராதத் தொகை நிலு​வையில் இருந்​த​தாக​வும், அதில், இது​வரை சுமார் ரூ.25,000 கோடி வசூலிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

அப்​போது நீதிப​தி​கள் கூறிய​தாவது: போக்​கு​வரத்து விதி​மீறல் தொடர்​பாக காவல் துறை​யினர் ஆயிரக்​கணக்​கான அல்​லது லட்சக்​கணக்​கான ‘இ-சலான்​’களை வழங்​கக்கூடும் என்​றாலும், அவற்றின் மூலம் விதிக்​கப்​பட்ட அபராதத் தொகையை வசூலிப்பதே உண்​மை​யான சவால். போக்​கு​வரத்து அபராதத் தொகையை வசூலிக்க அதி​காரி​கள் கள அளவில் உறு​தி​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

குறிப்​பாக, போக்​கு​வரத்து விதி​மீறல் அபராதத் தொகையை மக்கள் செலுத்​தாத பட்​சத்​தில், அதனை அவர்​களின் மின்​சா​ரக் கட்​ட​ணத்​துடன் சேர்த்​து​விட வேண்​டும். ஏனெனில், அவர்​கள் மின்​சா​ரக் கட்​ட​ணத்தை செலுத்​தியே ஆக வேண்​டும். இல்​லை​யெனில், மின் இணைப்பு துண்​டிக்​கப்​படும். எனவே, இதற்​கான வழி​முறையை வகுத்​துச் செயல் பட வேண்​டும்.

இது ஒரு யோசனை மட்​டுமே. நடை​முறைப்​படுத்​து​வதற்​கான உத்தரவு அல்ல. மேலும், செலுத்​தப்​ப​டாத ‘இ-சலான்’ கொண்ட வாக​னங்​களை அதி​காரி​கள் பறி​முதல் செய்​யும் நடவடிக்​கையை மேற்​கொள்​ளலாம். இவ்​வாறு தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT