இந்தியா

‘ஒரு மாவட்டம், ஒரு உணவு திட்டம்’ - உ.பி.யில் அமித் ஷா தொடங்கி வைத்​தார்

செய்திப்பிரிவு

லக்னோ: உ.பி.​யில் ‘ஒரு மாவட்​டம், ஒரு உணவு’ திட்​டத்தை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்​தார்.

உ.பி.​யின் முன்​னோடி திட்​ட​மான ‘ஒரு மாவட்​டம், ஒரு தயாரிப்​பு’ திட்​டத்​தின் அடிப்​படை​யில், ஒவ்​வொரு மாவட்​டத்​தின் பாரம்​பரிய உணவு மற்​றும் பான வகைகளுக்கு தனித்​து​வ​மான அடை​யாளத்தை வழங்​கு​வதே இந்​தத் திட்​டத்​தின் நோக்​க​மாகும். உத்​தரபிரதேச தினத்தை முன்​னிட்​டு, லக்​னோ​வில் உள்ள தேசிய உத்​வேக தலத்​தில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா இத்​திட்​டத்தை தொடங்கி வைத்​தார்.

          

இதுகுறித்து அதி​காரிகள் கூறும்போது, ‘‘‘ஒரு மாவட்​டம், ஒரு தயாரிப்​பு’ திட்​டம் சர்வதேச அளவில் பிரபலமாகி உள்ளது. அதேபோல் ‘ஒரு மாவட்​டம், ஒரு உணவு’ திட்​ட​மும் உலகளா​விய சந்​தைகளுக்கு செல்லும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT