இந்தியா

தூக்கமில்லாத இரவுகளை பாகிஸ்தானுக்கு கொடுத்த பிரம்மோஸ் ஏவுகணைகள்: அமித் ஷா பெருமிதம்

செய்திப்பிரிவு

கிரேட்டர் நொய்டா: உள்​நாட்​டில் தயாரிக்​கப்​படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்​தானுக்​குத் தூக்​கமில்​லாத இரவு​களை பரிசளித்​துள்ளன என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார்.

உ.பி. மாநில கிரேட்​டர் நொய்​டா​வில் நேற்று நடை​பெற்ற சர்வதேச வர்த்தக கண்​காட்சி தொடக்க விழா​வில் பங்​கேற்ற மத்திய அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது: பாதுகாப்புத்துறைக்கான கருவி​கள், தளவாடங்​கள், ஆயுதங்​கள் தயாரிப்​ப​தில் இந்​தியா தற்சார்பு நிலையை அடைந்து வரு​கிறது. உள்​நாட்​டில் தயாரிக்​கப்​படும் பிரம்​மோஸ் ஏவு​கணை​கள், பாகிஸ்தானுக்கு தூக்​கமில்​லாத இரவு​களை தந்து கொண்டு இருக்கின்றன.

தற்​போதைய மாற்​றம் ஒரு நல்ல அறிகுறி​யாகும். உ.பி. மாநிலத்தில் குறிப்​பாக அமே​தி​யில் தயாரிக்​கப்​படும் ஏகே 203 ரக துப்​பாக்​கி​கள், நக்​சலைட்​டு​கள், தீவிர​வா​தி​கள் என இருதரப்​பினருக்​கும் தூக்​கமில்​லாத இரவு​களை கொடுத்திருக்கின்றன.

உத்​தரபிரதேசத்​தில் உள்ள ஜான்​சி, சித்​ரகூட், லக்​னோ, ஆக்​ரா, அலிகர், கான்​பூர் ஆகிய பகு​தி​களுக்கு முதலீடு​கள் வந்து கொண்டு இருக்​கின்​றன. உலகள​வில் நிகழும் பல்​வேறு சூழல்​களுக்கு மத்​தி​யில் நம் நாடு பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்தி இருக்​கிறது. ஏற்​றுமதி வாய்ப்​பு​களை விரிவுபடுத்​தி​யதற்கு பிரதமர் மோடி​யின் பொருளா​தார கொள்​கைகளே காரணம். பாரபட்ச பார்வை கொண்​ட​வர்​களால் இந்​தி​யா​வின் முன்னேற்றத்தை பொறுத்​துக் கொள்ள முடி​யாது.

பல நாடு​களு​டன் இந்​தியா மேற்​கொண்​டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களால் ஏற்​றுமதி திறன் பன்​மடங்கு அதி​கரித்​துள்​ளது. முதலீட்​டுக்கு உகந்த சூழலை ஒரு மாநிலத்​தில் உரு​வாக்​கு​வதற்கு சட்​டம் ஒழுங்கு சிறப்​பாக இருப்​பது மிக முக்​கிய​மாகும். இவ்​வாறு மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷா பேசி​னார்​.

SCROLL FOR NEXT