சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ட்ரம்ப் விருந்து: எலான் மஸ்க், டிம் குக் பங்கேற்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ட்ரம்ப் விருந்து: எலான் மஸ்க், டிம் குக் பங்கேற்பு
Updated on: 
1 min read

வாஷிங்டன்: அமெரிக்கா​வுக்கு சுற்​றுப் பயணம் மேற்​கொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்​பிங்​குக்கு அந்​நாட்டு அரசு சார்பில் சிறப்பு விருந்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

அமெரிக்கா மற்​றும் சீனா ஆகிய இரு வல்​லரசு நாடு​களுக்கு இடையே ஆழமான பதற்​றங்​கள் நிலவி வரும் சூழலில், வாஷிங்​டன்​னில் உள்ள வெள்ளை மாளி​கை​யில் சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வியாழக்​கிழமை இரவு மிக ஆடம்​பர​மான அரசு விருந்து அளித்து உபசரித்​தார்.

இந்​தச் சிறப்பு விருந்​தில் டெஸ்லா நிறு​வனத்​தின் எலான் மாஸ்க், ஆப்​பிள் நிறு​வனத்​தின் டிம் குக், என்​விடியா நிறு​வனத்​தின் ஜென்சன் ஹுவாங் மற்​றும் ஓபன்ஏஐ நிறு​வனத்​தின் சாம் ஆல்ட் மேன் உள்​ளிட்ட அமெரிக்​கா​வின் முன்​னணி தொழில்​நுட்ப நிறு​வனங்​களின் தலை​வர்​கள் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

இதன் மூலம், வர்த்​தகம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு தொழில்நுட்​பம் ஆகியவை இரு நாடு​களுக்கு இடையி​லான தலைவர்​களின் பேச்​சு​வார்​தை​யில் முக்​கிய இடத்​தைப் பிடித்​துள்​ளது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. விருந்​தின் போது பேசிய ட்ரம்ப், “நானும் அதிபர் ஜின்​பிங்​கும் இரு வேறு​பட்ட நிர்​வாக முறைகளைப் பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​துகிறோம் என்​ப​தைப் புரிந்து கொண்​டுள்​ளோம். இருந்​தா​லும், நமது நாட்டு மக்​களுக்கு இடையி​லான பிணைப்பு எப்​போதும் தொடரும்” என்​றார்.

சீன அதிபர் ஜி ஜின்​பிங் பேசுகையில் ‘‘அமெரிக்கா​வும் சீனா​வும் அமை​தி​யுடன் இணைந்து வாழ வேண்​டும் என்​பதுடன் பொறுப்​புள்ள முதன்மை நாடுகளாகவும்​ செயல்​பட வேண்​டும்​” என்​றார்​.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ட்ரம்ப் விருந்து: எலான் மஸ்க், டிம் குக் பங்கேற்பு
ஞானேஷ் குமாரை குற்றம்சாட்டப்பட்ட நபராக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in