இந்தியா

சபரிமலை கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அரசு வாதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்தது தொடர்பான மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று முதல் விசாரிக்க தொடங்கியுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதித்த தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. மதத் தலைவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று கூறிவிட்டால் அந்த மதத்தை பின்பற்றுவோர் அதை ஏற்று நடக்கின்றனர். மத நம்பிக்கை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்றார். துஷார் மேத்தா இன்றும் தனது வாதங்களை முன்வைக்க உள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT