இந்தியா

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க எந்த நாட்டின் அனுமதியும் தேவையில்லை: அமெரிக்காவுக்கு மத்திய அரசு பதிலடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்க எந்த நாட்​டின் அனு​ம​தி​யும் தேவை​யில்லை என மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

மத்​திய கிழக்கு நாடு​களில் ஏற்பட்டுள்ள போர் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து தடைபட்​டு, உலக அளவில் கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை சுமார் 30 சதவீதத்​துக்கு மேல் உயர்ந்​துள்​ளது.

          

இந்​தச் சூழலில், 30 நாட்​களுக்கு ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கிக் கொள்ள இந்​தி​யா​வுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டிருப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யிருந்​தார். இதற்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கண்​டனம் தெரி​வித்​தன.

இதுகுறித்து மத்​திய அரசு வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்கு இந்​தியா ஒரு​போதும் எந்த நாட்​டின் அனு​ம​தி​யை​யும் சார்ந்து இருந்​த​தில்​லை’’ என்று திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது.

மேலும் அந்த அறிக்​கை​யில் ‘‘ஹார்​முஸ் பாதை​யில் பதற்​றம் அதி​கரித்து வரும் நிலை​யிலும், இந்​தி​யா​வின் எரிசக்தி விநி​யோகம் பாது​காப்​பாக​வும் சீராக​வும் உள்​ளது. இந்​தியா தனது கச்சா எண்​ணெய் ஆதா​ரங்​களை 27 நாடு​களி​லிருந்து 40 நாடு​களாக பன்​முகப்​படுத்​தி​யுள்​ளது. இதன் மூலம் பல மாற்று விநி​யோகப் பாதைகளை உறுதி செய்​துள்​ளது. தேசிய நலன் கரு​தி, எங்​கெல்​லாம் மிக​வும் மலி​வான விலை​யில் எண்​ணெய் கிடைக்​கிறதோ, அங்​கிருந்து இந்​தியா அதனை வாங்​கு​கிறது’’ என கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT