இந்தியா

மத்திய அரசின் தேசிய மத நல்லிணக்க அறக்கட்டளையை மூட முடிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாபர் மசூ​தி-​ராமர் கோயில் விவ​காரத்​தில் ஏற்​பட்ட மதக் கலவரங்​களின் தாக்​க​மாக 1992-ல் தேசிய மதநல்​லிணக்க அறக்​கட்​டளையை (என்​எப்​சிஎச்) மத்​திய அரசு உரு​வாக்​கியது. இது மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் கீழ் செயல்​படும் தன்​னாட்சி அமைப்​பாகும்.

இந்​நிலை​யில் மத்​திய அமைச்​சர்​கள் குழு​வின் பரிந்​துரையை ஏற்​று, இந்த அமைப்பை மூடி​விட உள்​துறை அமைச்​சகம் முடிவு செய்​துள்​ளது. இதற்கு முக்​கிய​மாக, கடந்த 10 வருடங்​களில் எந்த ஒரு தீவிர​வாதத் தாக்​குதலும் நடை​பெற​வில்லை எனக் காரணம் கூறப்​பட்​டு உள்​ளது.

          

என்​எப்​சிஎச் அமைப்​பின் சார்​பில், ஒரு முக்​கி​யத் திட்​டம் அமலில் உள்​ளது. நாட்​டில் வகுப்​பு​வாத, சாதி, இன அல்​லது தீவிர​வாத வன்​முறை​யால் பாதிக்​கப்​படும் குழந்​தைகளுக்கு மறு​வாழ்வு அளிக்​கும் திட்​டம் அது. இந்த நிதி​யுதவி திட்​டத்தை மத்​திய மகளிர் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்​டுத் துறைக்கு மாற்​ற​வும் மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் மத்​திய உள்​துறை அமைச்சக வட்​டாரங்கள் கூறுகை​யில், ‘‘இந்த மூடலுக்​காகக் கூடிய மத்​திய அமைச்​சர்​கள் குழு, கடந்த வருடம் காஷ்மீரின் பஹல்​காமில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதலை ஏனோ கவனத்​தில் கொள்​ள​வில்​லை. மத்​திய அரசின் இந்த முடிவுக்கு உள்​துறை, நிதி உள்​ளிட்ட அமைச்​சகங்​களும் ஒப்​புதல் அளித்து விட்​டன. மூடல் தொடர்​பான அதி​காரப்​பூர்வ அறி​விப்பு எந்​நேர​மும் வெளி​யாக வாய்ப்​புள்​ளது’’ என்று தெரி​வித்​தன.

மத நல்லிணக்க விருதுகள்: என்​எப்​சிஎச் அமைப்​பானது, 1860-ம் ஆண்டு சங்​கங்​கள் பதிவுச் சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​பட்ட ஒரு சங்​க​மாகும். இதன் நிர்​வாகக் குழு தலை​வ​ராக உள்​துறை அமைச்​சர் பதவி வகிக்​கிறார்.

மதக்​கல​வரங்​களால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மறு​வாழ்​வுக்​கான முயற்​சிகளுக்கு ஆதர​வளிப்​பதுடன், எதிர்​கால சமூகப் பிளவு​களைத் தடுப்​ப​தற்​காக மதநல்​லிணக்​கக் கூட்​டங்​களை ஊக்​கு​விப்​பதும் அதன் பணி​யாகும். என்​எப்​சிஎச் சார்​பில் தேசிய அளவில் மதநல்​லிணக்க விருதுகளும் வழங்​கப்​பட்​டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT