அசாம் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராஹா தொகுதியின் பாஜக வேட்பாளர் சஷி காந்த தாஸை ஆதரித்து அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று நாகோன் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.படம்: பிடிஐ

 
இந்தியா

அடுத்த 3 மாதங்களில் பொது சிவில் சட்டம்: அசாம் தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாமில் பாஜக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் 3 மாதங்​களில் பொது சிவில் சட்​டம் இயற்​றப்​படும் அக்​கட்சி வாக்குறுதி அளித்​துள்​ளது.

மொத்​தம் 126 இடங்​களை கொண்ட அசாம் சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி 31 வாக்​குறு​தி​கள் கொண்ட தேர்​தல் அறிக்​கையை பாஜக நேற்று வெளி​யிட்​டது. குவாஹாட்​டி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்​னிலை​யில் மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தேர்​தல் அறிக்​கையை வெளி​யிட்​டார்.

          

அதில் கூறி​யிருப்​ப​தாவது: அசாமில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால் அடுத்த 3 மாதங்​களில் பொது சிவில் சட்​டம் கொண்டு வரப்​படும். அதேசம​யம் பழங்​குடி​யினர் உரிமை​களை உறுதி செய்ய, அவர்​களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்​கப்​படும். லவ் ஜிஹாத், நில ஜிஹாத்தை முடிவுக்​குக் கொண்​டுவர பயனுள்ள சட்​டம் கொண்டு வரப்​படும்.

அசாம் பூர்​வகுடி மக்​களின் நாகரி​கம், பாரம்​பரி​யம் மற்​றும் உரிமை​களைப் பாது​காப்​ப​தற்​கான சட்​டம் வலுப்​படுத்​தப்​படும். சட்​ட​விரோத குடியேறிகளைக் கண்​டறிந்து அவர்​களைத் திருப்பி அனுப்​பும் செயல்​முறையைத் துரிதப்​படுத்​தும். சட்​ட​விரோத குடியேறிகளால் ஆக்​கிரமிக்​கப்​பட்ட நிலம் மீட்​கப்​படும். அசாமின் உண்​மை​யான குடிமக்​கள் அனை​வருக்​கும் நில உரிமை​கள் வழங்​கப்​படும். மடங்​கள், நாம்​கர்​கள், தேவால​யங்​கள் மற்​றும் பிற வழி​பாட்டு தலங்​களுக்​குச் சொந்​த​மான நிலங்​கள் மீட்​கப்​படும்.

அசாம் மாநிலத்தை இந்​தி​யா​வின் ‘கிழக்கு நுழைவு வாயி​லாக’ நிலைநிறுத்த ரூ.5 லட்​சம் கோடி முதலீடு செய்​யப்​படும். மாநிலத்​தில் வெள்ள பாதிப்​பு​கள் ஏற்​ப​டாத​வாறு தடுக்க ரூ.18,000 கோடி​யில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும். 2 லட்​சம் பேருக்கு அரசு வேலை​வாய்ப்பு வழங்​கப்​படும். பல்​வேறு திட்​டங்​களின் மூலம் அதிக தொழில்​முனை​வோர் வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.

ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் ஒரு மருத்​து​வக் கல்​லூரி, ஒரு பல்​கலைக்​கழகம், ஒரு பொறி​யியல் கல்​லூரி ஏற்​படுத்​தப்​படும். பெண்​களுக்கு வழங்​கப்​படும் மாதாந்​திர உதவித் தொகை ரூ.3 ஆயிர​மாக உயர்த்​தப்​படும்.

சுயஉதவி குழுக்​களை சேர்ந்த 40 லட்​சம் பெண்​கள் ஆண்​டுக்கு ரூ.1 லட்​சத்​துக்கு மேல் வரு​வாய் ஈட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்.தேயிலை தோட்​டத் தொழிலா​ளர்​களுக்கு வீடு வழங்​கப்​படும். அவர்​களின் தினசரி ஊதி​யம், ரூ.500 ஆக உயர்த்​தப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT