இந்தியா

உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமலாகும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தகவல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: வரும் 2027 உத்தர பிரதேச சட்​டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால், பொது சிவில் சட்டத்தை அமல்​படுத்​து​வோம் என்று மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா அறி​வித்​துள்​ளார்.

உ.பி. மாநில சட்​டப்​பேரவைத் தேர்​தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறி​விக்​கப்​பட உள்​ளது. இதற்கான ஆலோ​சனைக் கூட்​டம், உ.பி. பாஜக செயற்​குழுக் கூட்​டம் லக்​னோவில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​தில் அமித் ஷா பேசிய​தாவது: உ.பி.யிலிருந்து பாஜகவை யாராலும் அகற்ற முடி​யாது. உ.பி. மாநிலத்​தைப் பொறுத்​தவரை அக்​டோபர் 30-ம் தேதி என்​பது ஒரு முக்​கிய​மான நாளாகும்.

துப்பாக்கிச்சூடு

இதே நாளில் கடந்த 1990-ம் ஆண்​டில் சமாஜ்வாதி ஆட்​சி​யில் அயோத்​தி​யில் ராம பக்தர்​கள் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்தப்பட்டது. எந்த முகத்தை வைத்​துக்​கொண்டு சமாஜ்வாதி கட்சி, ஆட்சி அமைப்​ப​தைப் பற்​றிப் பேசுகிறது? நீங்​கள் ராம பக்தர்​கள் மீது துப்பாக்​கிச் சூடு நடத்​தினீர்​கள். ஆனால், நாங்களோ ராமர் கோயிலைக் கட்​டினோம். உங்​கள் மூன்​றாவது தலைமுறை வரை கூட மக்​கள் உங்​களை மன்​னிக்க மாட்​டார்​கள்.

கல்​யாண் சிங், தன் ஆட்​சி​யைப் பற்​றிக் கவலைப்​படா​மல் சர்ச்சைக்​குரிய கட்​டிடத்தை (பாபர் மசூதி) இடித்​தார். இங்கு உள்ள பாஜக அரசு என்​பது ‘அங்​கதனின் கால்’ (அசைக்க முடி​யாத ஒன்று) போன்​றது. அதை யாராலும் அகற்ற முடி​யாது. உ.பி.யில் பாஜக மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்​ப​தில் சந்​தேகமே இல்லை. மூன்​றாவது முறை​யாக உ.பி.யில் ஆட்சி அமையட்​டும். நாங்​கள் இங்கே பொது சிவில் சட்​டத்தை அமல்​படுத்​து​வோம். இவ்​வாறு அமித் ஷா பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT