மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி

 
இந்தியா

நீட் தேர்வைத் தொடர்ந்து யுஜிசி - நெட் சமூகவியல் வினாத்தாளும் கசிந்தது? - ரூ.2.25 லட்சத்திற்கு விற்பனை என ராகுல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் வினாத்தாளைத் தொடர்ந்து யுஜிசி-நெட் தகு​தித் தேர்​வின் சமூக​வியல் பாடத்​திற்​கான வினாத்​தாள் கசிந்துள்ளதாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ‘எக்​ஸ்’ சமூக வலை​தளப் பக்கத்தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: யுஜிசி-நெட் தேர்வு தொடங்​கு​வதற்​குச் சற்று முன்​பாக, 100 பக்​கங்​கள் கொண்ட ‘பிடிஎஃப்’ கோப்பு ஒன்று நாடு முழு​வதும் கசிந்​துள்​ளது. தேசிய தேர்வு முகமை​யிடம் மட்​டுமே இருக்​கக்​கூடிய வினாத்​தாள் தயாரிப்பு தொடர்​பான ரகசிய விவரங்​கள் அந்​தப் பக்​கங்​களில் இடம் பெற்​றிருந்​தன.

நடை​பெற்ற சமூக​வியல் தேர்​வுத் தாளின் வினாக்​களோடு ஒப்பிட்டுப் பார்த்​த​தில், இந்த பிடிஎஃப் கோப்​பில் இருந்த சுமார் 90 வினாக்​கள் அப்​படியே அசல் தேர்​வுத் தாளோடு ஒத்துப்போயுள்ளன. பிஹார், உத்​தரப் பிரதேசம், ஹரி​யா​னா, டெல்லி மற்​றும் ராஜஸ்​தான் ஆகிய மாநிலங்​களில் தலா ரூ.2.25 லட்​சத்​துக்கு இந்த வினாத்​தாள் சட்​ட​ விரோத​மாக விற்​பனை செய்யப்​பட்​டுள்​ளது.

வினாத்​தாள் கசி​வில் ஈடு​பட்​டுள்ள இதே கும்​பல்​தான் சிஎஸ்​ஐஆர்​-நெட், எச்​டிஇடி மற்​றும் ஏடிஏ போன்ற பிற போட்​டித் தேர்​வு​களின் வினாத்​தாள்​களை​யும் கசி​ய​விட்​டு, முறை​கேடு​களில் ஈடுபட்டுள்ளது தெரிய​வந்​துள்​ளது. நீட் மற்​றும் நெட் தேர்​வு​களில் அடுத்​தடுத்து இத்​தகைய முறைகேடு​கள் அரங்​கேறிய பின்​னரும், மோடி அரசு எதை​யும் கண்டுகொள்​ளாமல் ஆழமான உறக்​கத்​தில் ஆழ்ந்​துள்​ளது. இவ்வாறு ராகுல்​ காந்​தி பதி​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT