இந்தியா

ஐக்கிய அரபு அமீரக அதிபர் டெல்லி வருகை: பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான் 2 மணி நேர பயண​மாக நேற்று டெல்​லிக்கு வருகை வந்தார்.

ஈரான் அரசுக்கு எதி​ராக அந்த நாட்டு மக்​கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரு​கின்​றனர். இதில் 500 பாது​காப்பு படை வீரர்​கள், 4,500 பொது​மக்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். போராட்டக்​காரர்​களுக்கு ஆதர​வாக ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் திடீர் தாக்​குதல் நடத்​தக்​கூடும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்​டில் ஹவுத்​தி, பிஎல்​சி, எஸ்​டிசி ஆகிய 3 குழுக்​கள் தனித்​தனி​யாக ஆட்சி நடத்தி வரு​கின்​றன. இதில் ஹவுத்தி குழு​வுக்கு ஈரானும், பிஎல்சி குழு​வுக்கு சவுதி அரேபியாவும், எஸ்​டிசி குழு​வுக்கு ஐக்​கிய அரபு அமீரக​மும் ஆதரவு அளித்து வரு​கின்​றன.

ஏமனில் எஸ்​டிசி குழு​வின் கட்​டுப்​பாட்​டில் உள்ள எண்​ணெய் வயல்​களை ஐக்​கிய அரபு அமீரக நிறு​வனங்​கள் நிர்​வகித்து வரு​கின்​றன. இந்த எண்​ணெய் வயல்​கள் மீது சவுதி போர் விமானங்​கள் அண்​மை​யில் தாக்​குதல் நடத்​தின. இதன் ​காரண​மாக இது​வரை நட்பு நாடு​களாக இருந்த ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டிருக்​கிறது.

இந்த சூழலில் ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான் 2 மணி நேர பயண​மாக நேற்று டெல்​லி வருகை வந்தார். அவரை, பிரதமர் மோடி விமான நிலை​யத்​துக்கு நேரில் சென்று வரவேற்​றார்.

இது தொடர்​பாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளியிட்ட பதி​வில், “எனது சகோ​தரர் முகமது பின் ஜாயத் அல்நயானை நேரில் வரவேற்​றேன். அவரது வருகை இந்​தி​யா, ஐக்கிய அரபு அமீரகம் இடையி​லான உறவு, நட்​பின் முக்கியத்துவத்தை எடுத்​துரைக்​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

பொருளா​தா​ரம், பாது​காப்பு குறித்து இரு நாடு​களின் தலைவர்களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​ய​தாக வெளியுறவு துறை தெரி​வித்​துள்​ளது. மேலும் காசா, ஈரான், ஏமன் விவ​காரங்​கள் குறித்​தும் இரு தலை​வர்​களும் விரி​வாக விவாதித்ததாகக் கூறப்​படு​கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்யாகு, சவுதி அரேபிய இளவரசர் சல்​மான் ஆகியோ​ருடன் பிரதமர் நரேந்​திர மோடிக்கு நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. சர்வதேச விவ​காரங்​களில்​ சிறந்​த ராஜதந்​திரி​யாக​வும்​ அவர்​ போற்​றப்​படுகிறார்​.

SCROLL FOR NEXT