இந்தியா

பாகிஸ்தான் உளவாளி ஷாசாத் பாட்டி உத்தரவின் பேரில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​பாகிஸ்​தானைத் தளமாகக் கொண்ட கும்​பல் தலைவனும், அந்​நாட்டு உளவு (ஐஎஸ்ஐ) அமைப்​பின் முகவரு​மான ஷாசாத் பாட்டி என்​பவரின் தூண்​டு​தலின் பேரில் செயல்​பட்டு வந்த 2 பேரை டெல்லி காவல் துறை​யின் சிறப்​புப் பிரிவு நேற்று கைது செய்​துள்​ளது.

இது குறித்து டெல்லி காவல் துறை சிறப்​புப் பிரி​வின் துணை ஆணை​யர் பிர​வீன் குமார் திரி​பாதி கூறும்​போது, “மத்​தி​யப் பிரதேசத்​தின் குவாலியரைச் சேர்ந்த ராஜ்வீர் (21) மற்​றும் விவேக் பஞ்​சாரா (19) ஆகிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதன் மூலம் டெல்​லி- என்​சிஆர் பகு​தி​யில் துப்​பாக்​கிச் சூடு, கையெறி குண்​டுத் தாக்​குதல்​கள் மற்​றும் திட்​ட​மிட்ட கொலைகளைச் செய்யத் தீட்​டப்​பட்​டிருந்த ஒரு பெரிய குற்​றச் சதி முறியடிக்கப்பட்டுள்​ளது.

சமூக ஊடகங்​கள் வழி​யாக இளைஞர்​களைக் கவர்ந்​து, அவர்களை டெல்​லி-என்​சிஆர் பகு​தி​யில் வன்​முறைச் செயல்களில் ஈடு​படுத்தி வந்த ஷாசாத் பாட்டி மற்​றும் ஐஎஸ்ஐ தொடர்​புள்ள கையாட்​களின் சதியை இது அம்பலப்படுத்தியுள்ளது” என்​றார்.

வழக்​கின் பின்​னணி: டெல்​லி​யில் கையெறி குண்​டுத் தாக்​குதல் மற்​றும் துப்​பாக்கி மூலம் தாக்​குதல் நடத்​தத் திட்​ட​மிட்​டிருப்​ப​தாகக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்​து, கடந்த மார்ச் 31-ம் தேதி வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

ஏப்​ரல் 16-ம் தேதி மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரின் டப்​ரா​வில் இருந்து விவேக் பஞ்​சாரா முதலில் கைது செய்​யப்​பட்டார். ஏப்​.18-ல் விவேக் அளித்த தகவலின் அடிப்​படை​யில், டெல்​லி​யின் சராய் காலே கான் பகுதியில் ராஜ்வீர் கைது செய்​யப்​பட்​டார்.

ராஜ்வீர் கைது செய்​யப்​பட்​ட​போது, ஷாசாத் பாட்​டி​யின் உத்தரவின்​படி டெல்​லி- என்​சிஆரில் உள்ள ஒரு முன்​னணி ஓட்டலில் தாக்​குதல் நடத்​தத் தயா​ராகிக் கொண்​டிருந்​த​தாகக் காவல் துறை​யினர் தெரி​வித்​தனர். அவரிட​மிருந்து ஒரு பிஸ்​டல், 6 தோட்​டாக்​கள் மற்​றும் சதித் ​திட்​டம் தொடர்​பான வீடியோக்​கள், குரல் பதிவு​கள் கொண்ட இரண்டு மொபைல் போன்​கள் பறி​முதல்​ செய்​யப்​பட்​டன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT