இந்தியா

ஈரானுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையால் 2 இந்திய சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன

ஒரு லட்சம் மெட்ரிக் டன் சமையல் காஸ் வருகிறது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈ​ரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யின் பலனாக, 2 இந்​திய சரக்கு கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை நேற்று பாது​காப்​பாக கடந்​தன. இந்த கப்​பல்​களில் ஒரு லட்​சம் டன் சமையல் காஸ் இந்​தியா வரு​கிறது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் தீவிரமடைந்து வரு​கிறது. இதன் எதிர்​விளை​வாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்​குக் கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் ராணுவம் முழு​மை​யாக முடக்கி உள்​ளது.

          

ஆசிய நாடு​களுக்​கான கச்சா எண்​ணெய், சமையல் காஸ் சரக்கு போக்​கு​வரத்​தில் 85 சதவீதம் இந்த ஜலசந்தி வழி​யாகவே நடை​பெறுகிறது. அங்கு நாள்​தோறும் 150-க்​கும் மேற்​பட்ட சரக்​குக் கப்​பல்​கள் கடந்து செல்​வது வழக்​கம். ஆனால் தற்​போது ஈரான் ராணுவம் அனு​ம​திக்​கும் சில கப்​பல்​கள் மட்​டுமே ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து செல்​கின்​றன. கடந்த சில நாட்​களில் 18-க்​கும் மேற்​பட்ட சரக்கு கப்​பல்​களை ஈரான் ராணுவம் நடுக்​கடலில் வெடிகுண்​டு​கள் மூலம் தகர்த்து உள்​ளது.

இந்த சூழலில் கடந்த 12-ம் தேதி ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் இந்​திய சரக்குக் கப்​பல்​கள் பாது​காப்​பாக கடந்து செல்ல ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று அவர் வலி​யுறுத்​தி​னார்.

இதுபோல வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்​சங்​கர், ஈரான் வெளி​யுறவு அமைச்சர் அப்​பாஸ் அரக்​சி​யுடன் தொலைபேசி​யில் பலமுறை ஆலோ​சனை நடத்​தினார்.

இதையடுத்து கடந்த 7-ம் தேதி கத்​தா​ரின் ராஸ் லபான் துறை​முகத்​தில் இருந்து 55,000 மெட்​ரிக் டன் சமையல் காஸுடன் புறப்​பட்ட ஷிவாலிக் என்ற இந்​திய சரக்​குக் கப்​பல், போர் அச்​சுறுத்​தல் காரண​மாக பெர்​சிய வளை​குடா பகு​தி​யில் நிறுத்​தப்​பட்டு இருந்​தது. அந்த கப்​பல் ஈரான் ராணுவ அனு​ம​தி​யுடன் நேற்று பாது​காப்​பாக ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​தது.

இதே​போல கடந்த 1-ம் தேதி கத்​தா​ரின் ராஸ் லபான் துறை​முகத்​தில் இருந்து 46,000 மெட்​ரிக் டன் சமையல் காஸுடன் புறப்​பட்ட நந்தா தேவி என்ற இந்​திய சரக்​குக் கப்​பலும் நேற்று பாது​காப்​பாக ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​தது. இரு சரக்​குக் கப்​பல்​களும் நாளை அல்​லது நாளை மறு​நாள் குஜ​ராத்​தின் முந்த்​ரா, கண்ட்லா துறை​முகங்​களை வந்து சேரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT