பெங்களூரு: பெங்களூரு தெற்கு துணை காவல் ஆணையர் லோகேஷ் ஜகலசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு பீனியாவில் குட்கா வியாபாரிகளிடம் ஜிஎஸ்டி அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்தது.
இதுகுறித்து விசாரித்து ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலக தூய்மை பணியாளர்களான நாகராஜ் (35), தாடா பீர் (37) ஆகியோரை கைது செய்தோம். ஜிஎஸ்டி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வியாபாரிகளை குறிவைத்து அதிகாரி போல பேசி ரூ.5 லட்சம் வாங்கியுள்ளனர். அவர்களை கைது செய்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.