இந்தியா

ஆந்திராவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

செய்திப்பிரிவு

புத்தூர்: ஆந்திராவில் வெள்ளை ரேஷன் அட்டை வைத்திருக்கும் 1.48 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் தரமான அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் ஆந்திராவின் புத்தூரில் இருந்து ரேணிகுண்டா வழியாக ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் கடத்தப்படுவதாக வடமலை பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தை நோக்கி வேகமாக சென்ற லாரியை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.

இதில் லாரியில் 25 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரிசி மூட்டைகளுடன் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் சதீஷ், அவரது தந்தை மனோகரன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT