இந்தியா

நடிகை ட்விஷா சர்மா மரணத்தை தற்கொலை கோணத்தில் விசாரிக்கிறோம்: போபால் மாநகர காவல் ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

போபால்: நடிகை ட்விஷா சர்மா மரணத்தை தற்​கொலை கோணத்​தில் விசா​ரிப்​ப​தாக போபால் மாநகர காவல் ஆணையர் தெரிவித்​துள்​ளார்.

உத்தர பிரதேசத்தின் நொய்​டாவை சேர்ந்த நடிகை ட்விஷா சர்​மா, மத்​தி​யப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த வழக்​கறிஞர் சமர்த் சிங்கை கடந்​தாண்டு திரு​மணம் செய்​தார். இவர் போபாலில் உள்ள கணவர் வீட்​டில் கடந்த 11-ம் தேதி தூக்​கில் தொங்​கி​னார். வரதட்​சணை கொடுமையை சந்​தித்த ட்விஷா சர்மா கொலை செய்​யப்​பட்​டிருக்​கலாம் என அவரது பெற்​றோர் சந்​தேகம் தெரிவித்​தனர்.

இதையடுத்து ட்விஷா​வின் மாமி​யார் ஒய்வு பெற்ற நீதிபதி கிரி​பாலா சிங் கைது செய்​யப்​பட்​டார். தலைமறை​வாக உள்ள கணவர் சமர்த் சிங்கை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். நீதி​மன்​றத்​தில் இருந்து நிவாரணம் பெற, கிரி​பாலா சிங் நீதித்​துறை பின்​னணியை பயன்​படுத்​து​வ​தாக​வும் ட்விஷா சர்​மா​வின் தந்தை புகார் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில் போபால் மாநகர காவல் ஆணை​யர் சஞ்​சய் குமார் ட்விஷா சர்மா வழக்கு விசா​ரணை குறித்து கூறிய​தாவது: ட்விஷா சர்​மா​வின் பிரேத பரிசோதனை மற்​றும் தடய​வியல் சோதனை அறிக்​கைகள் அவர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டதை உறுதி செய்​கின்​றன. அதனால் தற்​கொலை கோணத்​தில் இந்த வழக்கை விசா​ரிக்​கிறோம். தற்​கொலை முடிவு எடுத்​ததற்​கான சூழலை ஆய்வு செய்து வரு​கிறோம்.

எங்​களுக்கு எந்த அழுத்​த​மும் கொடுக்​கப்​பட​வில்​லை. நாங்​கள் சுதந்​திர​மாக​வும், விரை​வாக​வும் இந்த வழக்கை விசா​ரிக்​கிறோம். சமர்த் சிங் விரை​வில் கைது செய்​யப்​படு​வார். அவரை பல இடங்​களில் போலீ​ஸார் தேடிவரு​கின்​றனர். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​. ட்விஷா குடும்​பத்​தார் 2-வது முறை​யாக பிரேத பரிசோதனை செய்​யப்பட வேண்​டும் என்ற கோரிக்கையை போபால் நீதி மன்றம் நேற்று நிராகரித்தது​.

SCROLL FOR NEXT