இந்தியா

திரிணமூல் கட்சிக்கு சிக்கல்: ஹுமா​யுன் கபீர் கருத்து

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் ஆளும் திரிணமூல் கட்சி எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால் கட்சியில் இருந்து கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், முர்​ஷி​தா​பாத்​தில் டிசம்​பர் 6-ம் தேதி பாபர் மசூதி கட்டுவதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து ஹுமா​யுன் கபீர் கூறும்​போது, “பாபர் மசூ​தி கட்டுவதற்கு முஸ்​லிம்​களிட​மும் ஏராள​மான பணம் உள்​ளது. அவர்​களும் மசூதி கட்ட உதவு​வார்​கள். வரும் 22-ம் தேதி என்​னுடைய புதிய கட்சி பற்றி அறி​விப்​பேன்.

திரிண​மூல் காங்​கிரஸ் முஸ்​லிம் வாக்கு வங்​கியை இழந்​து​விட்​டது. வரும் தேர்​தலில் இக்​கட்சி வெற்றி பெறாது. அதே​நேரம், பாஜக ஆட்​சிக்கு வரவும் அனு​ம​திக்க மாட்​டேன்’’ என்றார்.

இதுகுறித்து பாஜக மாநில தலை​வர் சமிக் பட்​டாச்​சார்யா கூறும்​போது, “இது திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் திட்​ட​மிட்ட செயல்’’ என்​றார்.

இதுகுறித்து மத்​திய அமைச்​சர் சுகந்தா மஜும்​தார் கூறும்​போது, ‘‘மசூதி கட்​டு​வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்​க​வில்​லை. ஆனால், பாபர் பெயரில் மசூதி கட்​டப்​போவ​தாகக் கூறு​வது இந்​துக்​களை அவம​திக்​கும்​ செயல்​. இதை ஏற்​க முடி​யாது’’ என்​றார்​.

SCROLL FOR NEXT