இந்தியா

திரிணமூல் எம்.பி. மஹுவா கைது வாரன்ட்டுக்கு தடை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நாடியா மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கிருஷ்ணாநகர் 3-வது நீதிபதி பிறப்பித்த சம்மன்களை ஏற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக கைது வாரன்ட்டு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மஹுவா மொய்த்ரா சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான கைது வாரன்ட்டுக்கு மறு உத்தரவு வரும் வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT