ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு: இங்கிலாந்தில் வசிக்கும் குற்றவாளி இந்தியா திரும்ப நீதிமன்றம் அனுமதி

ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு: இங்கிலாந்தில் வசிக்கும் குற்றவாளி இந்தியா திரும்ப நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பசோயா இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த ஜன.7-ம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

அதன் பின்னர், இன்டர்போல் மூலம் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. விசாரணைக்காக இந்தியா வர விரும்புவதாக ரிஷப் பசோயா டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

இதையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த ரெட் கார்னர் நோட்டீஸ் மற்றும் லுக் அவுட் சுற்றறிக்கை ஆகியவற்றை, அவர் இந்தியாவுக்கு வருவதற்கு வசதியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிஷப் தந்தை விரேந்தர் பசோயா இதே வழக்கில் கைது செய்யப்பட்டு துபாயிலிருந்து இந்தியாவுக்கு சமீபத்தில் நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு: இங்கிலாந்தில் வசிக்கும் குற்றவாளி இந்தியா திரும்ப நீதிமன்றம் அனுமதி
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in