இந்தியா

மேற்கு வங்கத்தில் திரிணமூல் மீண்டும் ஆட்சி அமைக்கும்: மம்தா பானர்ஜி நம்பிக்கை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று முதல்​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​வங்க தலைநகர் கொல்​கத்​தா​வில் நேற்று திரிணமூல் காங்​கிரஸ் சார்​பில் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் முதல்​வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: பதவி மீது எனக்கு விருப்​பம் இல்​லை. மத்தியில் உள்ள பாஜக ஆட்​சிக்கு முடிவு கட்ட வேண்​டும் என்​பது மட்​டுமே எனது ஒரே குறிக்​கோள்.

அதற்​கான நடவடிக்​கை​களில் ஈடு​பட்டு வரு​கிறேன். வாக்காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி​யால் மேற்குவங்கத்​தில் ஏராள​மானோர் வாக்​குரிமையை இழந்துள்​ளனர். இந்த தேர்​தலில் திரிண​மூல் காங்கிரஸுக்கு வாக்​களிக்​கா​விட்​டால் தங்​கள் உரிமைகளை இழக்க நேரிடும். இதன்​காரண​மாகவே வாக்கு சதவீதம் அதி​க​மாக உள்​ளது.

பிரதமர் மோடி மதத்​தின் பெய​ரால் மக்​களை பிளவுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்​கிறார். ஆனால் பிரதமரின் முயற்​சிகள் வெற்றி பெறாது. மேற்​கு​வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் மீண்​டும் ஆட்சி அமைக்​கும். இவ்வாறு முதல்​வர்​ மம்​தா பானர்​ஜி பேசி​னார்​.

SCROLL FOR NEXT