இந்தியா

ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர்கள் பிரிவுக்கு உச்ச நீதிமன்ற நடைமுறைகள் பற்றி பயிற்சி

தென் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த 10 பேர் பங்கேற்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாஜக​வின் தாய் அமைப்​பான ஆர்​எஸ்​எஸ் அமைப்​பில் சுமார் 40 முக்​கிய பிரிவு​கள் உள்​ளன. இதுத​விர சுமார் 2,500 துணை பிரிவு​களும் செயல்​படு​கின்​றன. இவற்​றில் வழக்​கறிஞர்​களுக்​காக அகில பார​திய அதிவக்த பரிஷத் (ஏபிஏபி) 1992-ல் தொடங்​கப்​பட்​டது. இதன் தமிழ்​நாடு கிளை​யாக, அகில பாரத வழக்​கறிஞர்​கள் சங்​கம் (ஏபி​விஎஸ்) 2013-ல் தொடங்​கப்​பட்​டது. இதில் தென் தமிழ்​நாடு மற்​றும் வடக்கு தமிழ்​நாடு என இரு பிரிவு​கள் உள்​ளன.

ஏபி​விஎஸ் சார்​பில் கடந்த வருடம் இளம் வழக்​கறிஞர்​களுக்​கான உச்ச நீதி​மன்​றப் பயிற்சி முகாம் ’சுப்​ரீம் விஷன்’ எனும் பெயரில் முதன்​முறை​யாகத் தொடங்​கியது. இரண்​டாவது பயிற்சி முகாம் கடந்த செப்​டம்​பர் 23 முதல் அக்​டோபர் 1 வரை டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில், தென் தமிழ்​நாடு பிரிவைச் சேர்ந்த தலா ஐந்து ஆண், பெண் இளம் வழக்​கறிஞர்​கள் கலந்து கொண்​டனர். இவர்​கள் அனை​வரும் கீழமை நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் ஆவர்.

இவர்​கள் உச்ச நீதி​மன்​றத்​தின் செயல்​பாடு​கள் குறித்து அறிந்து கொண்​டனர். இதற்​காக, மூத்த வழக்​கறிஞர்​களின் உதவி​யாளர்​களாக இணைந்து பணி​யாற்​றினர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’​யிடம் பயிற்சி பெற்​றவர்​களில் ஒரு​வ​ரான பழனி மாவட்ட கிளைச் செய​லா​ளர் எம்​.கோகுல் கூறும்​போது, ‘எங்​கள் தொழிலின் மிகப்​பெரியக் கனவாக இருப்​பது உச்ச நீதி​மன்ற நேரடி அனுபவம். பயிற்சி நாட்​களில், எங்​களுக்கு தமிழ​ரான உச்ச நீதி​மன்​றத்​தின் நீதிபதி வி.மோக​னாவை சந்​திக்​கும் வாய்ப்​பும் கிடைத்​தது. அப்​போது அவர் ஒரு வழக்​கறிஞர் எவ்​வாறு செயல்பட வேண்​டும், நீதிபரி​பாலனத்​தில் வழக்​கறிஞர்​களின் பங்கு மற்​றும் முக்​கி​யத்​து​வம் குறித்து அறி​வுரை வழங்​கி​னார்’ என்​றார்.

பயிற்​சி​யின் நிறைவு நிகழ்ச்​சி​யில் அகில பாரத அதிவக்த பரிஷத் தலை​வரும் கேரளா உயர் நீதி​மன்​றத்​தின் ஓய்​வு​பெற்ற நீதிப​தி​யான எம்​.நகரெஷ், உச்ச நீதி​மன்​ற மூத்த வழக்​கறிஞ​ரான செய​லா​ளர் பி.பரத் குமார் கலந்​து​கொண்​டனர். இவர்​கள், பயிற்​சிபெற்ற இளம் வழக்​கறிஞர்​களுக்கு சான்​றிதழ்​கள் வழங்கி சிறப்​பித்​தனர்.

SCROLL FOR NEXT