பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் தியாவரேகொப்பா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. அங்குள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பெங்களூருவை சேர்ந்த சமீக்ஷா ரெட்டி (27) கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது, சினையாக இருந்த நீர்யானை அவரை தாக்கியது.
பலத்த காயமடைந்த சமீக்ஷா ரெட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.