இந்தியா

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய உணவு வகைகளுடன் கலாச்சார விருந்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று முன்​தினம் தொடங்​கியது. அன்​றைய நிகழ்ச்​சிகள் முடிவடைந்த பிறகு, மாநாட்​டில் பங்​கேற்ற உலகத் தலை​வர்​களுக்கு பிரம்​மாண்​ட​மான கலாச்​சார விருந்து அளிக்​கப்​பட்​டது. அதனுடன் கலை நிகழ்ச்​சிகளும் இடம்​பெற்​றன. தலை​வர்​களை ஒருங்​கிணைக்​கும் வகை​யில் பிரதமர் நரேந்​திர மோடி இந்த விருந்​துக்கு ஏற்​பாடு செய்​திருந்​தார்.

இந்த இரவு விருந்​தில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த கலாச்​சா​ரப் பாரம்​பரி​யத்​தை​யும் பறை​சாற்​றும் வகை​யில், நாட்​டின் பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த உணவு வகைகளும் பழைய டெல்லி தெருக்​கடை உணவு வகைகளும் இடம்​பெற்​றிருந்​தன.

தொடக்க உணவு​கள்: கடு​கு, தேங்​காய், கரு​வேப்​பிலை மணத்​துடன் ஆவி​யில் வெந்த கடலைமாவு ரோலான ‘காண்ட்வி மில்​-ஃபியூய்’ மற்​றும் புதினா மணத்​துடன் ஷீர்​மல் ரொட்​டி​யுடன் பரி​மாறப்​படும் ‘கும்ப் கலவு​தி’ காளான் கபாப்.

முதன்மை உணவு​கள்: பனீர் லபாப்​தார், குங்​குமப்பூ மற்​றும் மமரா பாதாம் சேர்த்த இமயமலை மோரல் காளான்​களு​டன் கூடிய குச்சி மர்​மிக், தென்​னிந்​திய முறைப்​படி தேங்​காய் எண்​ணெ​யில் தாளிக்​கப்​பட்ட கேரட் பீன்ஸ் பொரியல், தக்​காளி பெல்லே சாரு, தினை புலாவ் மற்​றும் பீட்​ரூட் ரைதா.

இனிப்​பு​கள்: பழைய டெல்லி பாணி பழக்​கூட்​டுடன் ஜிலேபி மற்​றும் மல்​பெரி பழங்​கள், தங்க இலைகளால் அலங்​கரிக்​கப்​பட்ட ஷாஹ்தூட் ஃபிர்​னி.

கலாச்​சா​ரக் கொண்​டாட்​டம்: கலை நிகழ்ச்​சிகளுக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. ‘பிரிக்ஸ் சிம்​பொனி’ என்ற இந்த நிகழ்ச்​சி​யில், 160 இந்​திய, சர்​வ​தேச கலைஞர்​கள் பங்​கேற்​றனர்.

பரத​நாட்​டி​யம், குச்​சிபுடி, ஒடிசி, கதக் நடனங்​களும், பாரம்​பரிய இசைக்​கருவி​களின் நாத​மும் இந்த நிகழ்ச்​சியை அலங்​கரித்​தன. வெளி​யுறவு அமைச்​சகத்​தின் இந்​திய கலாச்​சா​ரத் தொடர்​பகம் கலை நிகழ்ச்​சி​யை வழிநடத்​தியது.

SCROLL FOR NEXT