இந்தியா

டெல்லி ராம் லீலா போராட்டம் குறித்து 20 மார்க்கெட், 20 பிரதிநிதிகள், 20 நிமிடம் ராகுல் காந்தி பேச்சு நடத்த வலியுறுத்தல்

வர்த்தகர்கள் அமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் 20 மார்க்​கெட்​களைச் சேர்ந்த 20 வர்த்​தக பிரதி​நி​தி​களு​டன் 20 நிமிடம் பேச்சு​வார்த்தை நடத்த நேரம் ஒதுக்குமாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு வர்த்​தகர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

நவம்​பர் 1-ம் தேதி டெல்​லி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் இண்​டியா கூட்​டணி சார்​பில் மிகப்​பெரிய பேரணி நடத்​தப்​படும் என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், இந்​தப் பேரணி நடந்​தால் தீபாவளி வியாபாரம் பாதிக்​கப்​படும் என வர்த்​தகர்​கள் கவலை தெரி​வித்துள்ளனர். இந்​நிலை​யில், பேரணி நடை​பெறும் இடத்​தி​லிருந்து 5 கிலோமீட்​டர் சுற்​றளவில் அமைந்​துள்ள 20 முக்கிய மார்க்​கெட்​களைச் சேர்ந்த 20 வர்த்​தகர்​களு​டன் 20 நிமிட சந்​திப்​புக்கு ஏற்​பாடு செய்​யக் கோரி, வர்த்​தக மற்​றும் தொழில் துறை சம்​மேளனத்​தின் தலை​வர் பிரிஜேஷ் கோயல், ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி​யுள்​ளார்.

அதில், “எங்​களுக்கு உரையாடலே வேண்​டும், சண்டை அல்ல. சிறுவர்த்​தகர்​கள் உட்​பட அனைவரின் கருத்​துகளுக்​கும் செவிசாய்ப்பதாக நீங்​கள் (ராகுல்) கூறுகிறீர்​கள். நாங்​கள் வெறும் 20 நிமிடங்​கள் மட்​டுமே கேட்​கிறோம். பேரணி​யில் பங்​கேற்க உள்ள​தாக எதிர்​பார்க்​கப்​படும் 10 லட்​சம் மக்​கள் கூட்​டம் எவ்​வாறு வியாபாரத்தை மேம்​படுத்தி, அதிக வாடிக்​கை​யாளர்​களைக் கொண்​டுவரும் என்​பதை நீங்​கள் விளக்​கினால், வர்த்​தகர்​கள் அமைப்பு உடனடி​யாகத் தனது எதிர்ப்​பைத் திரும்​பப் பெற்​றுக்​கொண்டு பேரணியை வரவேற்​கும்.

அதேநேரம் அந்​தக் கூட்​டத்​தால் வியாபாரத்​தில் நஷ்​டம் ஏற்​படும் என்று நாங்​கள் உங்​களை நம்​பவைத்​தால், பொது நலன் கருதி இந்தப் பேரணியை தீபாவளி வரை ஒத்​திவைக்க வேண்​டும். நீங்கள் வெறுப்​பின் சந்​தையில் அன்​பின் கடையைத் திறக்கிறீர்கள். அதற்​காக நாங்​கள் உங்​களை மதிக்​கிறோம். ஆனால் தீபாவளி சந்​தையில் அந்த அன்​பின் கடையை மூடவைத்து விடாதீர்​கள். நீங்​கள் கூறும் ‘அன்​பின் கடை’ என்ற முழக்​கத்​தின் உண்​மையான முகம் வணிகர்​களாகிய நாங்​கள்​தான்” எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT