இந்தியா

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் - 152 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப் பதிவு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் 152 தொகு​தி​களில் இன்று முதல் கட்​ட​மாக வாக்​குப்​ ப​திவு தொடங்கி நடை​பெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மேற்கு வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்ளன. இந்த தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடக்கிறது. முதல்​ கட்​டத்​தில் 152 தொகு​திகளுக்கு இன்று (ஏப்​ரல் 23) வாக்​குப் ​ப​திவு நடைபெற்று வருகிறது.

இந்த தொகு​தி​களில் நேற்று முன்​தினம் மாலை​யுடன் தேர்​தல் பிரச்சா​ரம் நிறைவடைந்​தது. முதல் கட்​டத் தேர்​தலில் மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்​ளனர்.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​களுக்​கும் பாஜக தொண்​டர்​களுக்​கும் இடையே பல்வேறு இடங்​களில் மோதல்​கள் நடை​பெற்​றன. இதை கருத்​தில் கொண்டு முதல்​கட்ட தேர்​தல் நடைபெறும் இடங்களில் மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.5 லட்​சம் வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடுபடுத்​தப்​பட்டு உள்​ளனர். 8 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் மிக​வும் பதற்​ற​மானவை​யாக அடை​யாளம் காணப்பட்டுள்​ளன.

பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடும் நந்​தி ​கிராம் தொகு​தி​யில் இன்று வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. அந்த தொகு​தி​யில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்ளன.

முதல்​ கட்ட தேர்​தல் நடை​பெறும் 152 தொகு​தி​களி​லும் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. அதுமட்டுமல்லாமல், பதற்றம் நிறைந்த வாக்​குச் ​சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாது​காப்​புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்​கத்​தில் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யும், பார​திய ஜனதா தலை​மையி​லான என்​டிஏ கூட்​ட​ணி​யும், காங்​கிரஸ் மற்​றும் இடது​சா​ரி​கள் கூட்​டணி என 4 முனைப்​போட்டி நில​வு​கிறது.

SCROLL FOR NEXT