இந்தியா

பக்தர்களுக்கு வழிகாட்டும் ‘வெங்கடாத்ரி’ செயலி: இன்று அறிமுகம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம்

இணைய வசதி இல்லாவிட்டாலும் செயல்படும்

என். மகேஷ்குமார்

திருமலை: ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய திரு​மலைக்கு வரும் பக்​தர்​களின் வசதிக்​காக ‘வெங்கடாத்ரி’ எனும் மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானம் இன்று அறி​முகம் செய்​கிறது. இணைய வசதி இல்​லாமலும் இந்த செயலி செயல்​படும். திருமலைக்கு ஏழு​மலை​யானை தரிசிக்க வரும் பக்​தர்​கள் வசதிக்காக, புதிய செயலி அறிமுகமாகிறது.

‘வெங்​க​டாத்​ரி’ எனும் செயலி மூலம் ‘கோ​விந்​தா’ எனும் வாய்ஸ் அஸிஸ்​டெண்ட்​டும் இதில் இணைத்​துள்​ளனர். இதற்கு இணைய வசதி தேவை​யில்​லை. ஆஃப் லைனிலும் 24 மணிநேர​மும் திரு​மலை​யில் செயல்​படும். இ்ச்செயலியை திருப்​பதி தேவஸ்​தானம் இன்று வெளி​யிடு​கிறது. இச்​செயலி வராத்​திரி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான 16-ம் தேதி முதல் முழு​மை​யாக செயல்​படும் என தேவஸ்​தான அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தில் உரு​வாக்கி உள்ள இந்த செயலி​யில், குடிநீர் எங்கு கிடைக்​கும்? ‘கால் போலீஸ் ஸ்டேஷன்’ என்​றதும் திரு​மலை போலீஸ் நிலை​யத்​திற்கு போன்கால் போகும்.

வாக​னத்தை ஓர் இடத்​தில் ‘பார்க்​கிங்’ செய்து விட்டு ‘மார்க் மைஸ்பாட்’ என நாம் பதி​விட்டு கொள்​ளலாம். நாம் செல்ல வேண்டிய இடமெல்​லாம் சுற்றி பார்த்து விட்​டு, ‘மார்க் மை ஸ்பாட்’ மீண்​டும் அழுத்​தி​னால் நமது கார், அல்​லது பைக்கை நிறுத்தி இருக்​கும் இடத்தை இந்த செயலி வழி​காட்​டும். இந்த செயலி தமிழ் உட்பட 5 மொழிகளில்​ செயல்​படும்.

SCROLL FOR NEXT