திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு

 
இந்தியா

சனாதன தர்மத்தை பாதுகாப்பதே லட்சியம்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுதி

செய்திப்பிரிவு

திருப்பதி: திருப்​ப​தி​யில் நேற்று நடை​பெற்ற 80-வது சுதந்​திர தின விழா​வில் திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு முக்​கிய விருந்​தின​ராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்​றி​னார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது:

முதல்​வர் சந்​திர பாபு நாயுடு​வின் உத்​தர​வின் பேரில், திரு​மலைக்கு வரும் ஒவ்​வொரு பக்​தரும் மன நிறைவோடு சுவாமியை தரிசித்து வீடு திரும்ப வேண்​டும் என்​பதே எங்​கள் குறிக்​கோளாகும். ஜீயர்​கள், ஆகம வல்​லுநர்​களின் வழி​காட்​டு​தலின் பேரில், திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் மட்​டுமின்​றி, தேவஸ்​தானத்​தின் கீழ் உள்ள அனைத்து கோயில்​களி​லும் ஆகம சாஸ்​திரங்​கள் பின்​பற்​றப்​படு​கின்​றன.

‘அன்​ன​தானமே மகா தானம்’ என்​ப​தற்​கேற்ப பக்​தர்​களுக்கு திருப்​பதி தேவஸ்​தானம் இலவச அன்​ன​தானம் செய்து வரு​கிறது. விரை​வில் திரு​மலை​யில் ரூ.120 கோடி செல​வில் மற்​றுமொரு அன்​ன​தான மையம் கட்​டப்பட உள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக, தேவஸ்​தான பாது​காப்பு பிரி​வினரின் அணிவகுப்பு மரி​யாதையை பி.ஆர். நாயுடு பார்​வை​யிட்​டார். சிறப்​பாக பணி​யாற்​றிய தேவஸ்​தான அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள் பலருக்கு பதக்​கங்​கள், நற்​சான்​றிதழ்​களை வழங்கி கவுர​வித்​தார். இதில் திருப்​பதி தேவஸ்​​தான பள்​ளி ​மாண​வியரின்​ நடன நிகழ்​ச்​சிகள்​ அனை​வரை​யும்​ கவர்​ந்​தன.

SCROLL FOR NEXT