மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பவானிபூரில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி பேசுகையில், “போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அது வன்முறையாக மாறக் கூடாது. யாராவது தொழிற்சாலைகளைச் சேதப்படுத்தினால், சிறை தண்டனையுடன் 3 மடங்கு அபராதமும் விதிக்கப்படும். ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து சேதமடைந்தால், ரூ.3 கோடி வசூலிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறினால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்” என்று எச்சரித்தார்.
பொது அமைதியைப் பாதுகாக்கவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்த அதிரடி சட்டத் திருத்தங்களை மேற்கு வங்க சட்டப்பேரவை கடந்த ஜூன் 28ம் தேதி நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, வன்முறையில் ஈடுபடுவோரை விசாரணையின்றி 12 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.