இந்தியா

திருப்பதியில் கிரேன் விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பதி: திருப்பதி டிபிஆர் சாலையில் கட்டிடப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. கிரேன் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. இதில் வட மாநிலத்தவர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். நேற்று காலையில் வழக்கம்போல் பணி நடந்து கொண்டிருக்கும்போது, அங்கிருந்த கிரேன் பள்ளத்தில் கவிழ்ந்து திடீரென விபத்துக்குள்ளானது.

இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமா ராவ் (45), காகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் சந்தீப் (34), திருப்பதியைச் சேர்ந்த செங்கைய்யா (40) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் திருப்பதி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT