இந்தியா

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் அணையா விளக்கை ஏற்ற, தொல்லியல் துறைக்கு உத்தரவிட கோரும் ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

மதுரையை சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், ”திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆண்டு முழுவதும் தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அர்விந்த் குமார், என்.கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.

          
SCROLL FOR NEXT