இந்தியா

“எலுமிச்சை பழத்தை வெட்டியதால் மழை நின்றது” - பாஜக எம்.பி.யின் விசித்திரமான பேச்சு

சிரிப்பை அடக்க முடியாமல் திணறிய சத்தீஸ்கர் முதல்வர்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாஜக எம்​.பி.​யான போஜ்​ராஜ் நாக், எலுமிச்சைப்பழத்தை வெட்​டியதன் மூலம் மழையை நிறுத்தியதாகக் கூறி​னார். இவரது பேச்​சைக் கேட்டு மேடை​யில் இருந்த அம்​மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய் உள்​ளிட்​டோர் சிரிப்பை அடக்க முடி​யாமல் திணறினர்.

சத்​தீஸ்​கர் மாநிலம் காங்​கர் மக்​கள​வைத் தொகு​தி​யின் பாஜக எம்​.பி.​யான போஜ்​ராஜ் நாக், பாலோட் மாவட்​டம் டூண்​டிலோரா பகு​தி​யில் நேற்று நடை​பெற்ற ஒரு அரசு விழா​வில் கலந்து கொண்டார். ‘மஹ்​தாரி வந்​தன் யோஜ​னா’ எனும் திட்​டத்​தின் 31-வது தவணையை வெளி​யிடு​வதற்​கான நிகழ்ச்சி அது. அப்​போது வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டதோடு, பலத்த மழை​யும் எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்​நிகழ்ச்​சி​யில் சத்​தீஸ்​கர் முதல்​வர் விஷ்ணுதேவ் சாய் கலந்து கொண்​டார். முதல்​வர் அமர்ந்த மேடை​யில் பாஜக எம்​.பி. போஜ்​ராஜ் நாக் பேசும்​போது, “மோச​மான வானிலைக்கு மத்​தி​யிலும் முதல்​வரின் வரு​கைக்​கான ஏற்​பாடு​கள் அறிவிக்​கப்​பட்​டன. திங்கட்​கிழமை முதலே வானிலை மோசமாக இருந்​தது, மழை பெய்யக்​கூடும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், நான் பிரார்த்​தனை செய்து எலுமிச்​சைப் பழத்தை வெட்​டினேன், உடனே மழை நின்​று விட்டது. நிகழ்ச்சி வெற்​றிகரமாக முடிந்​து​விட்​ட​தால், இனி மழை பெய்​தா​லும் கவலை​யில்​லை. அதனால் முதல்​வரின் இரவு ஓய்வு பாதிக்​கப்​ப​டாது” என்​றார்.

பாஜக எம்​.பி.​யின் இந்​தப் பேச்​சைக் கேட்​டதும், முதல்​வர் விஷ்ணுதேவ் சாய் உள்​ளிட்ட தலை​வர்​களால் தங்​கள் சிரிப்பை அடக்க முடிய​வில்​லை. இது தொடர்பாக வீடியோ காட்​சிப்​ப​திவு சமூகவலை​தளங்​களில்​ வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT