இந்தியா

‘‘2021-22 நிதியாண்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது’’: நிர்மலா சீதாராமன்

மோகன் கணபதி

புதுடெல்லி: 2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க 2021-22 நிதியாண்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: 2025-26-ல் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.1 சதவீதமாக இருந்த உற்பத்தி-கடன் விகிதம், 2026-27 பட்ஜெட் மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55.6 சதவீதமாக இருக்கும்.

          

உற்பத்தி-கடன் விகிதம் குறைந்து வருவது, வட்டி செலுத்துதல்களுக்கான செலவைக் குறைக்கும். கடன் அல்லாத வரவுகளின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு, ரூ. 34 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் நிகர வரி வரவுகள் ரூ. 26.7 லட்சம் கோடி. மொத்த செலவினங்களின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு ரூ. 49.6 லட்சம் கோடி. இதில் மூலதனச் செலவு சுமார் ரூ. 11 லட்சம் கோடி

குறையும் நிதிப் பற்றாக்குறை: 2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க 2021-22 நிதியாண்டில் செய்யப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டில், நிதிப் பற்றாக்குறை 2025-26-ம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டுக்கு இணையாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2026-27-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT