இந்தியா

உள்நாட்டில் தயாரான கடற்படையின் முதல் ஐஎன்எஸ் சமர்தக் கப்பல் - நாட்டுக்கு அர்ப்பணித்தார் குடியரசு துணைத் தலைவர்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கர்நாடக மாநிலம், கார்வாரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியக் கடற்படை சார்பில் உள்நாட்டிலேயே தயாரான பல் நோக்குக் கப்பலான 'ஐஎன்எஸ் சமர்தக்'கை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில், கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஐஎன்எஸ் சமர்தக் கப்பல் 75 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டுப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் தொழில் துறை, தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத் திறன்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

இது இந்தியாவின் பாதுகாப் புத் தேவைகளில் தன்னாட்சியை வலுப்படுத்துவதுடன், பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம், தற்சார்பு பாரதம் ஆகிய இலக்குகளை அடையவும் உதவும். இந்தியக் கடற்படை, நாட்டின் இறையாண்மையையும், கடல்சார் நலன்களையும் பாதுகாப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற் கொள்ளையைத் தடுப்பது, வெளிநாடுகளில் சிக்கித் தவிக் கும் இந்தியர்களை மீட்பது, மனி தாபிமான உதவிகளை வழங்கு வது, பேரிடர் காலங்களில் நிவா ரணப் பணிகளை மேற்கொள் வது ஆகியவற்றிலும் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது.

அடுத்த தலைமுறை ஆயுதங்கள், கண்காணிப்புக் கருவிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங் களைச் சோதித்துப் பார்ப்பதற்கு இக்கப்பல் பயன்படும். கடல்சார் கண்காணிப்பு, உளவு, கடலில் ரோந்துப் பணி, ஆளில்லா கருவி களைப் பயன்படுத்துதல் உள் ளிட்ட பல்வேறு பணிகளிலும் இக்கப்பல் உதவும்.

இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை வலுப் படுத்துவது அவசியம். இதில் கடற்படை, பொதுத்துறை பாது காப்பு நிறுவனங்கள், தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, கல்வி நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்படுவது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT