இந்தியா

நடிகர் டைகர் ஷெராப் மீதான தாக்குதல் முடிந்ததும் ‘ஆபரேஷன் நிறைவு’ என தகவல் அனுப்பிய குற்றவாளிகள்

மும்பை போலீஸ் விசாரணையில் தகவல்

செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீதான தாக்​குதல் முடிந்ததும் ஆபரேஷன் நிறைவு என குற்​றவாளி​கள் தகவல் அனுப்பியது போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் தெரியவந்துள்ளது.

கடந்த 17-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் ஜுஹு பகுதி​யில் உள்ள கால்​பந்து மைதானத்​துக்கு சென்​றுள்​ளார் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப். அங்​கிருந்து காரில் திரும்பும்​போது மர்ம நபர்கள் அவர் மீது துப்​பாக்​கிச்​சூடு நடத்தினர். இதில், நடிகர் டைகர், அவரது டிரைவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்​தில் ஈடு​பட்ட மர்ம நபர்​களைப் பிடிக்க 15 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன.

இதில், சந்​தேகத்​தின் பேரில் 3 பேரை ராஜஸ்​தான் மாநிலம் கோட்டாவில் போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த தாக்​குதலுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்​னோய் கும்​பல் பொறுப்​பேற்று உள்ளது.

கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் போலீ​ஸார் நடத்​திய விசாரணை​யில், இந்​தத் தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​களுக்கு ரூ.50 ஆயிரம் முன்​பண​மாக வழங்​கப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது.

இது​குறித்து போலீஸ் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “டைகர் ஷெராப் மீதான தாக்​குதல் வெற்​றிகர​மாக முடிந்​தால் கூடுதல் பணம் தரு​வ​தாகத் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. தாக்​குதல் முடிந்​ததும் ‘ஆபரேஷன் நிறைவுற்​றது’ என்று அவர்​கள், தங்​களை இந்த சம்​பவத்​தில் ஈடு​படுத்​திய நபர்​களுக்கு எஸ்எம்​எஸ் மூலம் தகவல் அனுப்​பியுள்​ளனர்.

சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்​டாளியான அனில் பண்​டிட், இந்​தச் சதித்​திட்​டத்​தில் முக்​கியப் பங்கு வகித்​திருக்​கலாம் என்று சந்​தேகிக்​கிறோம்’’ என்றார்.

மொட்டை அடித்​துக் கொண்டு தலைமறைவு

டைகர் ஷெராப் மீது துப்​பாக்​கி​யால் சுட்டு தாக்​குதல் நடத்​திய ஹிருத்​திக் குமார் என்​கிற ரோஷன் போலீ​ஸாரிடம் சிக்​காமல் இருக்க தனது தலையை மொட்டை அடித்​துக் கொண்டு தலைமறைவாக இருந்​துள்​ளார்.

மேலும், அடிக்​கடி வாடகை வீடுகளை மாற்​றியும் வந்​துள்​ளார். மும்​பைக்கு வரு​வதற்கு முன்பு அவர் நீண்ட தலைமுடி வைத்திருந்தார். டைகர் மீது தாக்​குதல் நடத்​திய பின்​னர் அப்​பகுதி மக்​கள் தன்னை அடை​யாளம் காண்​ப​தைத் தவிர்க்க தனது தலையை மொட்டை அடித்​துக் கொண்​டுள்​ளார். ஹிருத்​திக் ஏற்கனவே குற்​றப் பின்​னணி கொண்​ட​வர் என்​ப​தால், அவரது விவரங்​கள் போலீ​ஸாரிடம் உள்​ளன. அந்த தகவல்களின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT