டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ்: அரசியல் வருகை குறித்து ஆலோசனையா?

டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ்: அரசியல் வருகை குறித்து ஆலோசனையா?
Updated on: 
1 min read

சென்னை: டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ், அவர் அரசி​யல் கட்சி தொடங்​கு​வது குறித்து முக்​கிய பிர​முகர்​களைச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வ​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

தமிழ் திரை​யுல​கின் முன்​னணி நடிக​ரான தனுஷ் அரசி​யலில் களமிறங்க உள்​ள​தாக நாள்​தோறும் வெளியாகும் தகவல்​கள் சமூக வலை​தளங்​களி​லும், அரசி​யல் வட்​டாரங்​களி​லும் விவாதத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ரசிகர் மன்​றங்​களை, நற்​பணி இயக்​க​மாக ஒருங்​கிணைத்து, ரசிகர்​களை பல்​வேறு சமூக நலப் பணிகளில் ஈடு​படுத்​தும் நட​வடிக்​கைகளை தனுஷ் தீவிரப்​படுத்தி உள்​ளார்.

முதல்​வர் விஜய் தற்​போது அரசி​யலில் தீவிர​மாகச் செயல்​பட்டு வரும் நிலை​யில், தனுஷின் அடுத்​தகட்ட நகர்​வு​கள் குறித்த எதிர்​பார்ப்​பும் தற்​போது அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, தனுஷ் ரசிகர் மன்​றத்​தினர் சமூக நலப் பணிகளுக்​காகப் பயன்​படுத்தி வரும் சிவப்பு மற்​றும் வெள்ளை நிறக் கொடி, அரசி​யல் கட்​சி​யின் கொடியைப் போன்று இருப்​ப​தாக அண்​மையில் விவாதம் எழுந்​தது. இருப்​பினும், இந்​தக் கொடி கடந்த 10 ஆண்​டுகளுக்​கும் மேலாகப் பயன்​பாட்​டில் இருந்து வரு​வ​தாக ரசிகர் மன்​றத் தரப்​பில் விளக்​கமளிக்​கப்​பட்​டது.

மேலும், தனுஷின் பெயரில் ‘தமிழக எழுச்​சிக் கழகம்’ என்ற புதிய அரசி​யல் கட்சி பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாகத் தகவல்​கள் பரவி வரு​கின்​றன. ஆனால், இது​குறித்து, தனுஷ் தரப்​பி​லிருந்து இது​வரை எந்​தஒரு அதி​காரப்​பூர்வ தகவலும் வெளியாக​வில்லை.

இந்​தச் சூழலில், அரசி​யல் கட்சி தொடங்​கு​வது தொடர்​பாக முக்​கியப் பிர​முகர்​களைச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வதற்​காக தனுஷ் நேற்று முன்தினம் டெல்லி சென்றுள்ளார். அங்கு 2 நாட்களாக முகாமிட்டிருக்கும் அவர் சில முன்​னணி அரசி​யல் வியூக நிபுணர்​கள் மற்​றும் ஆலோ​சகர்​களைச் சந்​தித்து, தமிழக அரசி​யல் களத்​தில் கால் பதிப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள், கட்​சி​யை கட்​டமைக்​கும் முறை மற்​றும் எதிர்​காலத் தேர்​தல் திட்​டங்​கள் குறித்து ஆலோ​சிக்க வாய்ப்​புள்​ள​தாகத் தகவல்​கள் தெரி​விக்​கின்​றன.

அதேநேரம், சில தேசி​யக் கட்​சிகளின் முக்​கியப் பிர​முகர்​கள் அல்​லது சட்ட வல்​லுநர்​களைச் சந்​தித்து, அகில இந்​திய அளவி​லான அரசி​யல் சூழ்​நிலைகள் மற்​றும் கட்​சித் தொடக்​கத்​துக்​கான வழிகாட்​டுதல்​களை​யும் இந்த சந்​திப்​பின் போது பெறலாம் என்​றும் தெரி​கிறது.

இதற்​கிடையே, தனுஷ் நற்​பணி இயக்க நிர்​வாகி​கள் மற்​றும் மகளிர் அணி​யினர் பங்​கேற்​கும் சிறப்​புக் கூட்​டம் விரைவில் நடை​பெற உள்​ள​தாகக் கூறப்​படுகிறது.

இந்​தக் கூட்​டத்​தில் ரசிகர்​களு​டன் தனுஷ் புகைப்​படம் எடுத்​துக்​கொள்​வதுடன், இயக்​கத்​தின் அடுத்​தகட்​டச் செயல்​பாடுகள் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தக் கூட்​டத்​தில் அரசி​யல் தொடர்​பான அறி​விப்பு ஏதே னும் வெளியாகுமா என்ற எதிர்​பார்ப்​பும் ரசிகர்​கள் மத்​தி​யில் எழுந்​துள்​ளது.

டெல்லியில் முகாமிட்டிருக்கும் நடிகர் தனுஷ்: அரசியல் வருகை குறித்து ஆலோசனையா?
நாதக தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in