இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்​மு-​காஷ்மீரின், ஸ்ரீநகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட சினார் கார்ப்ஸ் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “புத்​காமில் உள்ள அஷ்​தார் காலி பகு​தி​யில் இந்​திய ராணுவம், ஜம்மு-​காஷ்மீர் போலீ​ஸார், சிஆர்​பிஎஃப் படை​யினர் இணைந்து நேற்று தேடு​தல் வேட்டை நடத்தினர்.

அப்​போது, வீரர்​கள் சிலரின் சந்​தேகத்​திற்​கிட​மான நடமாட்​டத்​தைக் கவனித்​தனர். அவர்​களைச் சோதனை செய்​த​போது, தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதையடுத்​து, இரு தரப்​பினருக்​கும் இடையே துப்​பாக்​கிச் சண்டை நடை​பெற்​றது. இதில் ஒரு தீவிர​வாதி சுட்​டுக் கொல்​லப்​பட்​டதுடன், துப்​பாக்கியும் கைப்​பற்​றப்​பட்​டது” என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT