இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மைனஸ் டிகிரியில் பதிவாகும் வெப்பநிலை

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் உயர​மான பகு​தி​களில் இரவு முழு​வதும் பனிப்​பொழிவு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் இரவுநேர வெப்​பநிலை பூஜ்ஜி​யத்​துக்கு கீழே சென்​றுள்​ளது.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: கந்​தர்​பால் மாவட்​டத்​தில் ஸ்ரீநகர்- டிராஸ் இடையி​லான சோஜிலா கணவாய், மினாமர்க், பல்​தால் ஆகிய இடங்​களில் பனிப்​பொழிவு பதி​வாகி​யுள்​ளது. இது​போல் பந்​தி​போரா மாவட்​டத்​தின் குரேஸ் பள்​ளத்​தாக்​கில் உள்ள துலைல் பகு​தி​யிலும் பனிப்​பொழிவு பதி​வாகி​யுள்​ளது. ஸ்ரீநகர் மற்​றும் பள்​ளத்​தாக்​கின் பெரும்​பாலான பகு​தி​களை அதி​காலை​யில் அடர்ந்த பனிமூட்​டம் சூழ்ந்​தது.

ஜம்மு காஷ்மீரில் மிக​வும் குளி​ரான இடமாக புல்​வாமா இருந்​தது. அங்கு குறைந்​த​பட்ச வெப்​பநிலை மைனஸ் 2.7 டிகிரி​யாக பதி​வாகி​யுள்​ளது.

தெற்கு காஷ்மீரில் காசிகுண்ட், கோகர்​நாக் ஆகிய இடங்​களில் குறைந்​த​பட்ச வெப்​பநிலை 0.8 டிகிரி​யாக பதி​வானது. அதே​நேரத்​தில் வடக்கு காஷ்மீரின் குப்​வா​ரா​வில் இது 1.2 டிகிரி​யாக இருந்​தது. இவ்​வாறு அதி​காரி​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT