இந்தியா

ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி

என். மகேஷ்குமார்

அமராவதி: ஆந்திர மாநிலத்​தில் சமீபத்​தில் நக​ராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மன்​றத் தேர்​தல்​கள் நடந்து முடிந்​தன. இதில் ஆளும் தெலுங்கு தேச ​கூட்டணிக் கட்​சிகள் மாபெரும் வெற்றியைப் பெற்​றுள்​ளன.

இது​குறித்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று அமராவதி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய​தாவது: கடந்த 2024-ல் நடை​பெற்ற பொதுத் தேர்​தலை​விட, தற்​போது நடை​பெற்ற உள்ளாட்​சித் தேர்​தலில் தெலுங்கு தேசமும் அதன் கூட்​ட​ணிக் கட்சிகளும் மாபெரும் வெற்றி பெற்​றுள்​ளன. இந்த தேர்​தலில் எங்கள் கூட்டணிக்கு 58.90% வாக்​கு​கள் கிடைத்​துள்​ளன. ஒய்.எஸ்.ஆர். காங்​கிரஸ் கட்​சிக்கு 33.56 சதவீதம் கிடைத்​துள்​ளன. பொதுத் தேர்​தலுடன் ஒப்​பிடுகை​யில், ஒய்.எஸ்.ஆர். காங்​கிரஸ் கட்சிக்கு 6.25 சதவீத வாக்​கு​கள் குறைந்​துள்​ளன.

நகர்ப்​புறங்​களில் எங்​களுக்கு 59.9% வாக்​கு​கள் கிடைத்​துள்​ளன. கடந்த இரண்​டரை ஆண்​டுகள் நல்​லாட்சி புரிந்​துள்​ளோம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்​துக்​காட்டு. எங்​கள் மீது இவ்​வளவு நம்​பிக்கை வைத்​துள்ள மக்​களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். மேயர், சேர்​மேன் பத​வி​களுக்​கான தேர்​தலில் 94% இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளோம். 13 மாநக​ராட்​சிகளில் 12-ஐக் கைப்​பற்​றியுள்​ளோம். 87 நக​ராட்​சித் தலை​வர் பத​வி​களில் 82-ல் வெற்றி பெற்​றுள்​ளோம். 3,941 வார்​டுகளில் 3,233-ல் வெற்றி பெற்றுள்ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT