கோல்டு மேன் சூரிய பாபு

 
இந்தியா

‘கோல்டு மேன்’ சூரியபாபு மீது தெலங்கானா போலீஸ் வழக்கு

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் பாத்​த​பஸ்தி பகு​தியை சேர்ந்​தவர் சூரியகு​மார். இவர் கிலோ கணக்​கில் தங்க ஆபரணங்​களை அணிந்து உலா வரு​வார்.

இதனால் இவரை கோல்டு மேன் என்றும் சூரிய ​பாபு என்​றும் மக்கள் அழைப்​பதுண்​டு. இவர் குறைந்த விலைக்கே தங்​கம் வாங்கி கொடுப்​ப​தாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக சிலர் ஹைத​ரா​பாத் நாராயண கூடா போலீஸ் நிலையத்​தில் நேற்று புகார் அளித்​தனர்.

அதில், தனக்கு முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, ஹைத​ரா​பாத் போலீஸ் ஆணை​யர் ஆகியோர் நல்ல நண்​பர்​கள். தங்​கம் வாங்கி கொடுக்காத காரணத்​தி​னால் பணத்தை திருப்பி தர வேண்​டும் என கேட்​டதற்கு சில நாட்​களுக்கு முன் ரூ.20 லட்​சத்துக்கு காசோலை​யும், 3 ஐபோன்​களும் கொடுத்​தார். அந்த காசோலையில் பணம் இல்லை என்​று கூறப்​பட்​டுள்​ளது.

மேலும், செல்​போன்​களை மீண்​டும் தானே வீட்​டுக்கு வந்து பிடுங்கி சென்று விட்​ட​தாக​வும் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் கூறுகின்றனர். இதன் காரண​மாக கோல்டு மேன் சூரிய ​பாபு மீது நா​ராயண கூடா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து வி​சா​ரணை நடத்​த உள்​ளனர்​.

SCROLL FOR NEXT