இந்தியா

தெலங்கானா: கொடுத்த குக்கர், பணத்தைக் கேட்டு தோல்வி அடைந்த காங். வேட்பாளர் தகராறு

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலத்​தில், 7 மாநக​ராட்​சிகள், 116 நகராட்​சிகளுக்கு தேர்​தல் சமீபத்​தில் நடந்து முடிந்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை முதல் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற்​றது. இதில் 4 மாநக​ராட்​சிகளை காங்​கிரஸ் கைப்​பற்​றியது. ஒரு மாநக​ராட்​சியை பாஜக கைப்​பற்​றியது. மீத​முள்ள 2 மாநக​ராட்​சிகளில் இழுபறி நிலை நீடித்​தது.

நகராட்சி மன்​றங்​களை பொருத்​தவரை, மொத்​த​முள்ள 2581 வார்​டு​களில் 1342 வார்​டு​களில் காங்​கிரஸ், 718 பிஆர்​எஸ், 258 பாஜக, மற்​றவர்​கள் 251 வார்​டு​களில் வெற்றி பெற்​றுள்​ளனர்.

          

இந்நிலையில், தெலங்​கானா மாநிலம், கம்​மம் மாவட்​டம், அஸ்​வ​ராவ் பேட்டை நகராட்​சி​10-வது வார்​டில் காங்​கிரஸ் கட்சி சார்​பில் போட்​டி​யிட்ட வேட்​பாளர் தோல்வி அடைந்​தார். இதனால் அவர் ஆத்​திரம் கொண்​டு, தான் போட்​டி​யிட்ட வார்​டுக்கு சென்​று, வாக்​களிக்க தான் கொடுத்த பணம், குக்​கர்​களை மீண்​டும் தனக்கே திரும்ப வழங்க வேண்​டும் என கூச்​சலிட்​டார்.

இதனை கண்டு அங்​குள்ள மக்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். அதன் பின்​னர், நாங்​கள் என்ன உன்​னிடம் பணம் கேட்​டோ​மா? அல்​லது வீட்​டிற்கு குக்​கர் வாங்கி தர சொன்​னோ​மா? தேர்​தலில் வெற்றி பெற நீதான் எங்​களுக்கு வலுக்​கட்​டாய​மாக வழங்​கி​னாய் என சரமாரி​யாக கேள்வி கேட்​டனர். இதனால் அங்கு பொது​மக்​கள் கூட தொடங்​கினர்.

இதனை தொடர்ந்து சிலர் இவரிடம் வாங்​கிய குக்​கரை சாலையில் போட்டு விட்டு சென்​றனர். தகவல் அறிந்த போலீ​ஸார் பிரச்​சினை இன்​ன​மும் அதி​க​மா​காமல் தடுத்​து, வேட்​பாளரை அங்கிருந்து அழைத்து சென்று விட்​டன.

ஆனால், தேர்​தலில் பணம் அல்​லது பொருளை வாக்​குக்​காக கொடுப்​பது சட்​டப்​படி குற்​றம். இதனால், வேட்​பாளர் மீது வழக்கு பதிவு செய்​துள்ளோம். த​விர 988 வழக்​கு​கள் இந்​த தேர்​தல்​ தொடர்​பாக பதிவு செய்​துள்​ளோம் என்று தெலங்​கானா மாநில டிஜிபி சிவ்​தர் ரெட்டி செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT