இந்தியா

ரேவந்த் ரெட்டி ஆட்சி முடிவுக்கு வரும் வரை பாத யாத்திரை: தெலங்கானா பாஜக எம்பி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்​கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும்​வரை பாத யாத்திரை மேற்​கொள்​வேன் என்று பாஜக எம்பி ஈடல ராஜேந்​தர் தெரிவித்துள்​ளார்.

தெலங்​கானாவின் காங்​கிரஸ் ஆட்​சி​யில் ஊழல், முறைகேடுகள் அதி​கரித்து வரு​வ​தாக பாஜக எம்பி ஈடல ராஜேந்​தர் குற்​றம் சாட்டி வரு​கிறார். ஹைத​ரா​பாத் ஜவஹர்​நகர் குப்பை கிடங்கை அகற்றக் கோரி கடந்த 27-ம் தேதி அவர் பாத யாத்​திரையை தொடங்​கினார். மொத்​தம் 60 கி.மீ. தொலைவை அவர் கடந்து உள்ளார்.

இது​குறித்து ஈடல ராஜேந்​தர், “தெலங்​கானாவில் ரேவந்த் ரெட்டி ஆட்சி வீழும் வரை தொடர்ந்து பாத யாத்​திரை மேற்​கொள்​வேன். எனக்கு வேறு வேலை இல்லை என்​ப​தால் பாதயாத்​திரை மேற்​கொள்​வ​தாக காங்​கிரஸார்் கூறுகின்​றனர். காங்​கிரஸ் ஆட்சி கவிழும் வரை இந்த வேலையை தொடர்ந்து செய்​வேன்” என்று தெரி​வித்​தார்.

அமித் ஷாவின் பாத யாத்​திரை

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வரும் நவம்​பர் 2-ம் தேதி ஹைத​ரா​பாத்​தில் பாதயாத்​திரை மேற்​கொள்​கிறார். ‘ஜனநாயகத்தை காப்​போம், அராஜகத்தை அகற்​று​வோம்’ என்​கிற முழக்​கத்​துடன் இந்த பாத யாத்​திரை நடை​பெற உள்​ளது. தெலங்கானாவில் பாத யாத்திரை மூலம் பலர் ஆட்சியைப் பிடித்துள்ள தால் பாஜக-வும் பாதயாத் திரை அரசியலை கையிலெடுத் துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT