தேஜ் பிர​தாப் யாதவ்

 
இந்தியா

அரசு பங்​களாவை காலி செய்யுமாறு நிதிஷ், ஜிதன் ராமுக்கும் நோட்டீஸ் வழங்குங்கள்: தேஜ் பிரதாப் காட்டம்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முன்​னாள் முதல்​வர் ராப்ரி தேவி​யின் அரசு பங்களாவை காலி செய்​யு​மாறு மாநில அரசு உத்​தர​விட்​டதற்கு அவரது மகனும் ஜனசக்தி ஜனதா தளம் கட்​சி​யின் தலை​வரு​மான தேஜ் பிர​தாப் யாதவ் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

ராப்ரி தேவி​யும் அவரது குடும்​பத்​தினரும் தற்​போது பாட்​னா​வில் 10 சர்க்​குலர் ரோடு பங்​களா​வில் வசித்து வரு​கின்​றனர். இந்த பங்களா, பால் மற்​றும் மீன்​வளத் துறை அமைச்​சர் நந்த கிஷோர் ராமுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து தேஜ் பிர​தாப் நேற்று கூறுகை​யில். “அரசு பங்களாவை எனது தாயார் காலி செய்ய வேண்​டும் என பிஹார் அரசு 15 நாள் கெடு விதித்து நோட்​டீஸ் அளித்​துள்​ளது. முன்​னாள் முதல்​வர்​களான நிதிஷ் குமார், ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோ​ரும் பாட்​னா​வில் அரசு பங்​களா​வில் வசித்து வரு​கின்​றனர். அவர்களுக்​கும் இது​போன்று நோட்​டீஸ் வழங்​கப்பட வேண்​டும்” என்​றார். கடந்த வாரம் ராப்ரி தேவி அரசு பங்​களாவை காலி செய்ய மறுத்​ததை அடுத்து இந்த சர்ச்சை வெடித்​தது.

SCROLL FOR NEXT