ஐ.ஜி.பி.சுந்​தர்​ராஜ்

 
இந்தியா

பாதுகாப்பு படையினருக்கு பயிற்சியளிக்கும் மாவோயிஸ்ட்கள்

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தர் சரக காவல்​ துறை ஐ.ஜி.பி. சுந்​தர்​ராஜ் கூறிய​தாவது: பஸ்​தர் சரகத்​தில் உள்ள 7 மாவட்டங்களில் இருந்து சரணடைந்த 18 மாவோ​யிஸ்ட்​கள் காங்கர் வனப்​போர் பயிற்சி (சிடிஜேடபிள்​யூ) கல்​லூரி​யில் பாதுகாப்பு படை​யினருக்கு பயிற்சி அளிப்​ப​தற்கு அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர்.

இவர்​களில் பலர் மாவோ​யிஸ்ட் அமைப்​பில் இருந்​த​போது வெடிகுண்​டு​களைக் கையாள்​வ​தி​லும், மற்​றவர்​களுக்​குப் பயிற்சி அளிப்​ப​தி​லும் கைதேர்ந்​தவர்​களாக இருந்​துள்​ளனர். வனப்​பகுதிகளில் மாவோ​யிஸ்ட்​கள் கையாளும் தந்​திரோ​பா​யங்​களை முறியடிக்க, தொழில்​நுட்ப அறிவைப் பயன்​படுத்​திக் கொள்​ளும் நோக்​கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு சுந்​தர்​ராஜ் கூறி​னார்​.

          
SCROLL FOR NEXT