உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம் 
இந்தியா

ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம்: அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

வெற்றி மயிலோன்

புது டெல்லி: அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இவ்விவகாரத்தை இன்னும் சில நாட்கள் கழித்து விசாரித்தாலும் "வானம் இடிந்து விழுந்துவிடாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

வழக்கின் அவசரத் தன்மை குறித்து நீதிமன்றப் பதிவகம் மற்றும் உரிய அதிகாரி ஆகியோர் திருப்தி அடைந்த பிறகு, உரிய நேரத்தில் இந்த மனுக்கள் விசாரணைக்குப் பட்டியலிடப்படலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு கூறியது.

மனுதாரர்களில் ஒருவரான அஜய் குமார் ராய் நேரில் ஆஜராகி, விரைவான விசாரணைக்கு வலியுறுத்தியதுடன், முறைகேடு புகார்கள் மீதான தற்போதைய விசாரணையில் திருப்தியில்லை என தெரிவித்தார். இந்த விவகாரத்தில், ​​உத்தரப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மூத்த கூடுதல் தலைமை வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான சரண் தேவ் சிங் தாக்கூர் ஆஜரானார்.

பின்னணி என்ன? - உத்தர பிரதேசத்​தி​லுள்ள அயோத்தி ராமர் கோயில் அறக்​கட்​டளைக்​குப் பக்​தர்​கள் அளித்த காணிக்​கை​யில் ரூ.7 கோடிக்​கும் அதி​க​மான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்​கள் கையாடல் செய்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இந்​நிலை​யில் அறக்​கட்​டளை​யின் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் மற்​றும் அறங்​காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்​களது பதவி​களை அண்​மை​யில் ராஜி​னாமா செய்​தனர். கோயிலுக்கு வந்த நன்​கொடை நிதி​யில் முறை​கேடு நடந்​த​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்​து, குற்​றத்​துக்கு தார்​மீகப் பொறுப்​பேற்று இந்த ராஜி​னா​மாவை அளித்​துள்​ளனர். இதுதொடர்​பாக கோயி​லில் பணத்தை எண்​ணும் பணி​யில் ஈடு​பட்ட ஊழியர்​கள் உட்பட 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT