இந்தியா

நவகேரளா திட்டம் ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கேரளா​வில் அரசுத் திட்​டங்​கள் குறித்த விழிப்புணர்வை ஏற்​படுத்​த நவகேரளா குடிமக்​கள் திட்​டம் தொடங்கப்​பட்​டது.​

இதை எதிர்த்து கேரள உயர்​ நீ​தி​மன்​றத்​தில் 2 பொதுநல மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இந்த திட்​டத்தை ரத்து செய்து உத்​தர​விட்​டது.

தேர்​தலுக்கு முன்​ன​தாக, அரசி​யல் பிரச்​சா​ரத்​தைப் போன்ற ஒரு பெரிய அளவி​லான (வீடு வீடாக) ஆய்​வுக்கு பொது நிதி​யை​யும், அரசு இயந்​திரங்​களை​யும் பயன்​படுத்த முடி​யாது என்று உயர் நீதிமன்​றம் சுட்​டிக்​காட்​டியது.

இந்​தத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்​பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதி​மன்​றத்​தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்​தது. மேலும் இது குறித்து பதில் அளிக்க மனுதாரர்களுக்கு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

          
SCROLL FOR NEXT