கோப்புப்படம்
புதுடெல்லி: கிசான் மகா பஞ்சாயத்து அமைப்பு தாக்கல் செய்த ஒரு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
பின்னர் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது: இப்போது கோதுமை மட்டுமே ஒரே விருப்பமாக இல்லை. கோதுமை மற்றும் அரிசியிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நேரம் இது. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கோதுமை மற்றும் நெல்லுக்கு ஏற்ற மாற்றுப் பொருளாகவும், தென் பிராந்தியங்களில் பிற பயிர்களுக்கு மாற்றாகவும் பயறு வகைகளை முன்னிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
பருப்பு வகைகள் சாகுபடிக்கு விவசாயிகள் மாறுவதை ஊக்குவிக்க, வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளும் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் புரிதலுடன் பணியாற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.