இந்தியா

இந்தியா-பிரான்ஸ் நட்பு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘உல​கள​வில் அரசி​யல் நெருக்​கடி நில​வும் நிலை​யில், இந்​தியா - பிரான்ஸ் இடையி​லான கூட்​டாண்மை உயிர்நாடியாக உள்​ளது’’ என உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரி​வித்​துள்​ளார்.

இந்தோ - பிரெஞ்சு சட்ட மற்​றும் வணிக கருத்​தரங்கு டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: உலகள​வில் ஏற்​பட்​டுள்ள அரசி​யல் நெருக்​கடி, சர்​வ​தேச கட்​டமைப்பை சீர்​குலைக்​கும் நிலை​யில், இந்​தியா - பிரான்ஸ் இடை யி​லான கூட்​டாண்மை என்​பது ஆடம்​பரம் அல்ல. இது ஒரு உயிர்நாடி.

          

இரு நாடு​கள் இடையி​லான உறவு நீண்ட கால​மாக தூதரக உறவைத் தாண்​டி, ஒரு பல பரி​மாணக் கட்​டமைப்​பாக மாறி​யுள்​ளது. இது பாது​காப்பு ஒத்​துழைப்பு முதல் நிலை​யான வளர்ச்சி மற்​றும் மேம்​பட்ட தொழில்​நுட்​பங்​களை பகிர்​தல் வரை அனைத்​தை​யும் உள்​ளடக்​கிய​தாக உள்​ளது.

கடந்த 2009-10-ம் ஆண்​டில் 6.4 பில்​லியன் டால​ராக இருந்த இருதரப்பு வர்த்​தகம், கடந்த நிதி​யாண்​டில் 15.11 பில்​லியன் டால​ராக அதி​கரித்​துள்​ளது.

பிரான்ஸ் மற்​றும் இந்​தியா இடையி​லான உறவு பல நூற்​றாண்​டு​களாக உரு​வான ஒரு பிணைப்​பு. ஜனநாயகம், சட்​டத்​தின் ஆட்சி மற்​றும் அமை​தி​யான, நீதி​யான உலக ஒழுங்​கைப் பின்​பற்​று​தல் ஆகிய​வற்​றில் இரு நாடு​களும் கொண்​டுள்ள நம்​பிக்​கை​யால் அவை ஒன்​றிணைக்​கப்​பட்​டுள்​ளன.

2026-ம் ஆண்டு கண்​டு​பிடிப்​புக்​கான ஆண்​டு. இதன் விளிம்​பில் நாம் நிற்​கும்​போது, நாம் இனி வெறும் கூட்டை மட்​டும் கட்​ட​வில்​லை, நாம் பறப்​ப​தற்​கான வானத்​தையே உரு​வாக்​கு​கிறோம். இந்​தியா மற்​றும் பிரான்ஸ் இந்த ஆண்டு கண்​டு​பிடிப்​புக்​கான புதிய யுகத்​தில் நுழை​யும்​போது, ஒரு வலு​வான வழக்கு தீர்வு கட்​டமைப்​பின் ஆதர​வுடன் இதை நாம் எதிர்​கொள்ள வேண்​டும்.

பயிற்சி பெற்ற சட்ட நிபுணர்​களை கொண்டு இரு நாடு​கள் இடையே கூட்டு சமரசரக் குழுக்​களை உரு​வாக்க வேண்​டும். இத்​தகைய நிபுணர் குழுக்​கள், தொழில்​நுட்ப மேன்மை மட்​டுமன்​றி, சர்ச்​சைகளைத் தீர்ப்​ப​தற்​கு தேவை​யான கலாச்​சார, நீதித்​துறை தகவல்​களை வழங்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT