அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார்

 
இந்தியா

அமைச்சரவையில் இணைய அஜித் பவார் மனைவிக்கு ஆதரவு: மாநில அமைச்சர் நர்ஹாரி தகவல்

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டி​ரா​வின் ஆளும் மகா​யுதி கூட்​ட​ணி​யில் அஜித் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி இடம் பெற்​றுள்​ளது. இந்​நிலை​யில் துணை முதல்​வ​ராக இருந்த இக்​கட்​சி​யின் தலை​வர் அஜித் பவார் விமான விபத்​தில் நேற்று முன்​தினம் இறந்​தார். இவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலங்​களவை எம்​.பி.​யாக உள்​ளார்.

இந்​நிலை​யில் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யின் எதிர்​காலம் குறித்து இக்​கட்​சி​யைச் சேர்ந்த மாநில உணவுத்​துறை அமைச்​சர் நர்​ஹாரி ஜிர்​வால் கூறுகை​யில், ”மகா​ராஷ்டிர அமைச்​சர​வை​யில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் சேர்க்​கப்பட வேண்​டும் என மக்​கள் விரும்​பு​கின்​றனர்.

நாங்​கள் இது குறித்து தலை​மை​யுடன் பேசி முடி​வெடுப்​போம். தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யின் இரு பிரிவு​கள் ஏற்​கெனவே ஒன்​றாக உள்​ளோம். பிரிந்​திருப்​ப​தில் அர்த்​தம் இல்லை என அனை​வரும் உணர்​கிறோம்​” என்று தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT